CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-06

ரோபோ சூட்டிங் தொடக்கம் : ரஜினிகாந்த் அமெரிக்கா போனார்

Super star rajinikanth
குசேலன் படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ரோபோ. சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் ஷங்கர், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தின் கதாநாயகியா முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில்தான் படமாக்கப்படவுள்ளது என்று ஏற்கனவே டைரக்டர் ஷங்கர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் முதலில் போட்டோ செஷனை முடித்து விட்டு, சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பே ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, காஸ்யூம் டிசைனர் மணிஷ் மல்கோத்ரா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!