Hot Tamil Actress Laxmi rai
முத்த இமேஜ் இருப்பது தப்பே இல்லை என்று நடிகை லட்சுமி ராய் கூறியுள்ளார்.தமிழ்சினிமா உலகுக்கு வந்து குறிப்பிடும் படியான படங்களில் நடிக்கவில்லையென்றாலும் லட்சுமி ராயை சுற்றி எப்போதுமே வதந்திகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரர் தோனியுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின்னர் மேலும் 3 கிரிக்கெட் வீரர்களுடன்..., அதன் பின்னர் தங்கையை கிரிக்கை வீரர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததால் வீட்டில் பிரச்னை என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் லட்சுமிராய்க்கு அடுத்த பிரச்னை முத்த நடிகை என்ற பட்டம்தான்.
நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி ராய் நடிக்கும் தாம்தூம் படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. ஆனால் படத்தில் ஜெயம் ரவிக்கு, லட்சுமிராய் அழுத்தமான லிப் டூ லிப் முத்தம் கொடுத்த செய்தி மட்டும் கசிந்து, அம்மணிக்கு முத்த இமேஜை கொடுத்து விட்டது. இதுபற்றி லட்சுமிராய் கூறுகையில், தாம்தூம் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். நான் நடித்த படங்களிலேயே உடல் தெரியாத அளவுக்கு உடையணிந்து நடித்திருப்பது இந்த படத்தில்தான். படத்தின் கதைப்படி குளிர் பிரதேசத்தில் ஐஸ்கட்டி போல் குளிரும் தண்ணீரில் ஜெயம் ரவி விழுந்து விடுவார். அவரை காப்பாற்றுவதற்காக மனிதாபிமானத்துடன் உதட்டோடு உதடு பதித்து மூச்சுக்காற்றை செலுத்துவேன். இது எப்படி முத்தக்காட்சி ஆகும். தேவையில்லாமல் என் மீது முத்த இமேஜை செலுத்துகிறார்கள், என்று சொல்லும் லட்சுமிராய், முத்த இமேஜ் ஒன்றும் தப்பான இமேஜ் இல்லை என்றும் கூறினார். (நல்லாவே குழப்புறாருங்கோ...!)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!