நடிகர் ஒருவரது கண்ணத்தில் இயக்குனர் அடித்த விவகாரம் தற்போது கோலிவுட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஓட்டப்போட்டி பெயரில் படம் இயக்கி வருகிறார் தளபதி நடிகரின் தந்தை. இந்த படத்தில் நிதினமான நடிகர்தான் ஹீரோ. படத்தில் தளபதி நடிகருக்கும் ஒரு சிறு கவுரவ கேரக்டர் உண்டு. இதுவரை சாப்ட்டான கேரக்டர்களில் நடித்து வந்த நிதின நடிகர் இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகிறார்.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது நிதின நடிகர் வழக்கம்போல தனது பொறுமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இதை பார்த்த இயக்குனர், நடிகரை திட்டினார். ஆனாலும் தனது பாணியை மாற்றிக் கொள்ளாத நடிகரின் கண்ணத்தில் பளார் என அடி விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத நிதினம் கண்ணீர் விட்டு கதறி அழுவிட்டாராம். இதனால் கோபமடைந்த இயக்குனர், நீ இந்தபடத்தில் ஆக்ஷன் ஹீரோ... இப்படி அழுவது என்று பேசிவிட்டு, பின்னர் சமாதானப்படுத்தினாராம். இதுபற்றி சம்பந்தப்பட்ட நடிகரிடம் கேட்டால்... அட... விடுங்க சார்.. என்று சொல்லி விட்டு, என்ன இருந்தாலும் அவர் என்னை அடிச்சிருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.
2008-08-01
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!