CINEMA NIRUBAR WELCOMES YOU

2011-08-19

சிம்பு என்றைக்குமே என் நண்பரல்ல! ஜீவா பேட்டி!!

கோ படத்தில் வாய்ப்பை இழந்த நடிகர் சிம்புவுக்கும், நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது. நடிகர் சிம்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் கோ படத்தையும், நடிகர் ஜீவாவையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிம்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னால் மறைந்திருந்து குத்துவது ஆரோக்கியமான போட்டி அல்ல, என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கோ படத்தை அடுத்து நான் நடித்து திரைக்கு வந்துள்ள ரவுத்திரம் படமும் 70 சதவீதம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து நான் நடித்து திரைக்கு வர இருக்கும் படம், `வந்தான் வென்றான்.' இந்த படம் அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வரும். அதையடுத்து கவுதம் மேனன் டைரக்ஷனில் ஒரு படத்திலும், மிஷ்கின் டைரக்ஷனில், `முகமூடி' என்ற படத்திலும் நடிக்கிறேன். இந்த படங்களை அடுத்து, டைரக்டர் ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன், என்றார்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!