2008-05-03
காதல் விவகாரம் : மீண்டும் குழப்புகிறார் விஷால்
மக்களை குழப்புபவர்கள் பட்டியலில் அரசியல்வாதிகளுக்கு பிறகு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் நடிகர்கள்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மூத்த நடிகர்களைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவார்களா? என்ற கேள்வியும், இளம் நடிகர்களிடம் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியும், மூத்த நடிகைகளிடம் அரசியல் கட்சியில் சேருவீர்களா? என்ற கேள்வியும், இளம் நடிகைகளிடம் யாரை காதலிக்கிறீர்கள்? என்ற கேள்வியும் காலம் காலமாக கேட்கப்பட்டுத்தான் வருகிறது. நடிகர்களும், நடிகைகளும் ரசிகர்களுக்கு ஒரு தெளிவான பதில் சொல்லாமல் குழப்பி வருதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
சரி... விஷயத்துக்கு வருவோம்!
இப்போது ரசிகர்களை குழப்பியிருப்பவர் நடிகர் விஷால். ஏற்கனவே ஒரு வார இதழுக்கு காதலர் தினத்தையட்டி நடிகர் விஷால் அளித்த பேட்டியில், நான் காதலிக்கிறேன். அவர் ஒரு நடிகை என்று புதிர் போட்டார். இதையடுத்து விஷால் ப்ரியாமணியை காதலிக்கிறார், நயன்தாராவை காதலிக்கிறார் என்று பத்திரிகைகள் கிசுகிசுக்க ஆரம்பித்தன. ஆனால் இவை அனைத்திற்கும் விஷால் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நடிகர் விஷால் மீண்டும் காதல் விவகாரம் பற்றி பேசி ரசிகர்களை குழப்பியிருக்கிறார். ஸ்ரீ லஷ்மி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் டி.அஜய்குமார் தயாரித்த படம் மலைக்கோட்டை. விஷால், பிரியாமணி ஜோடியாக நடிக்க ஜி.பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., கே.பாக்யராஜ், பார்த்திபன் முன்னிலை வகித்து படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பரிசளித்தனர்.
வெற்றி விழாவில் விஷால் பேசியதாவது:-
மலைக்கோட்டை படத்தின் ஹீரோ, திரைக்கதைதான். ஒரே படத்தில் 4 ஹீரோயின்களுடன் நடிப்பது சாதாரண விஷயமல்ல. ப்ரியாமணி, ஊர்வசி, நிரோஷா, ரேகா என 4 நாயகிகளுடன் இதில் நடித்தது சந்தோஷம். ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ப்ரியாமணியை காதலிக்கிறீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அவரை காதலிக்கவில்லை. ஒரு பத்திரிகையில் காதலர் தினத்துக்காக பேட்டி கேட்டபோது யாரையாவது காதலிக்கிறீர்களா? என்றார்கள். ஆம் என்றேன். யாரை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. அதற்குள் ப்ரியாமணியை காதலி்க்கிறார். நயன்தாராவை காதலிக்கிறார் என்று எழுதிவிட்டார்கள். நான் காதலிக்கிறேன். ஆனால் ப்ரியாமணியையோ, நயன்தாராவையோ அல்ல என்று கூறி மீண்டும் புதிர் போட்டார் விஷால்.
இந்த முறை பத்திரிகைகள் விஷாலுடன் யாரை ஜோடி சேர்த்து எழுதப்போகின்றனவோ தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!