CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-14

கவர்ச்சியில் கலக்கிய சின்னத்திரை நடிகைகள்

தனியார் டி.வி. சேனல்கள் முளைத்திராத காலகட்டத்தில் தூர்தர்ஷன் டி.வி.யில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகளை காண முடியும். வெள்ளிக்கிமை ஒளியும், ஒலியும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் சினிமா. அந்த நிலை கொஞ்சம் மாறி மதிய நேரத்தில் நாடகங்கள் இடம்பெற ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில்தான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகத் துவங்கின. கடந்த சில ஆண்டுகளாக தனியார் டி.வி.க்களில் அதிக அளவிலான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. நேயர்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நல்ல வருமானம்.


இதனால் சினிமாவில் வாய்ப்பை இழந்த நடிகைகளும் சின்னத்திரை பக்கம் திரும்பி விடுகிறார்கள். ஏராளமான இளம் நடிகைகளும் சின்னத்திரையில் காலூன்றி வெற்றி பெற்று வருகிறார்கள். சின்னத்திரையில் திறைமையை காட்டி வரும் இளம் நடிகைகளில் சிறந்தவர்களை அடையாளம் காட்டும் வகையில் கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை போட்டி உருவாக்கப்பட்டது. இந்த போட்டியை நடத்தியவர் நடிகர் விஷ்வா.

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மிஸ் சின்னத்திரை போட்டி நடந்தது. சென்னை லாமிக்கேல் கிளப்பில் நடந்த இப்போட்டியில் கண்களை கவரும் வகையில் மது, ஆர்த்தி, தாரிகா, ஸ்வேதா, தீபா, ஜூலி, ரியா, அனிஷா, காவ்யா உள்ளிட்ட 10 சின்னத்திரை நடிகைகள் பங்கேற்றனர்.

வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க நடிகைகள் சங்கீதா, அஞ்சலி, இயக்குநர்கள் மாதேஷ், கோலங்கள் திருச்செல்வம், கடந்த ஆண்டு மிஸ் சின்னத்திரை பட்டம் வென்ற சந்தோஷி மற்றும் மாடல் அழகி காவ்யா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

முதல் சுற்றில் புடவை கட்டியபடி நடிகைகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் நடிகைகள் தங்களுக்கு தெரிந்த ஆட்டம், பாட்டம் என்று திறமைகளை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்த சுற்றுகளில் மாடல் ஆடையணிந்து கண்களை கவர்ந்தனர். சின்னத்திரையில் அழுகாட்சியில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகளா இவர்கள்? என்று கேட்கும் அளவுக்கு நடிகைகளின் தோற்றத்தில் புதுப்பொலிவு.

கடைசியில் அறிவு திறனை சோதிக்கும் சுற்று. இதில் நடுவராக வந்திருந்த இயக்குநர் மாதேஷ் அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன் வைத்தார். பெண்மையின் இலக்கணம் என்ன? என்ற அவரது கேள்விக்கு பத்துபேரும் பதிலளித்தனர். பின்னர் மிஸ் சின்னத்திரை-2008 ஆக நடிகை ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். தாரிகா 2வது இடத்தையும், அனிஷா 3வது இடத்தையும் வென்றனர்.

இதுதவிர சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
சிறந்த சிரிப்பழகி - காவ்யா
சிறந்த சரும அழகி - ஜூலி
மக்களால் பெரிதும் விரும்பப்படும் அழகி - தாரிகா
சிறந்த உடல் அழகி - மது
சிறந்த கேட்வாக் அழகி - தீபா
சிறந்த கண்ணழகி - ஸ்வேதா

சின்னத்திரை விருது நிகழ்ச்சியை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார். பின்னணிப் பாடகி மஹதி, நடிகைகள் ப்ரியதர்ஷினி, நீபா, டிங்கு ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் செய்திருந்தது.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!