CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-11

தெலுங்கு சினிமாவில் தமிழ் கவர்ச்சி பாம்



தமிழ் சினிமா வரலாற்று புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் கவர்ச்சி நடிகைகளில் பெரும்பாலானோர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பர். இப்போது தமிழ் சினிமாக்களில் கவர்ச்சி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் முமைத்கான், மும்தாஜ், நமீதா போன்றவர்களெல்லாம் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மற்ற மாநிலத்து நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துக் கொண்டிருக்கும் வேளையில், சத்தமில்லாமல் ஒரு தமிழ் நடிகை தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி பிரியாணியே படைத்து வருகிறார்.

அவர் வேறு யாருமல்ல... பூனைக்கண் புவனேஸ்வரியேதான். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரி ஆரம்ப காலங்களில் டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். விபசார வழக்கில் சிக்கிய பிறகு தமிழ் டி.வி. சிரீயல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட புவனேஸ்வரி, தெலுங்கு பக்கம் போனார்.

தெலுங்கு திரையுலகம் புவனேஸ்வரியை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. அவருக்காகவே தனி கவர்ச்சி கதாபாத்திரத்தை உருவாக்கும் அளவுக்கு புவனேஸ்வரியின் புகழ் ஆந்திரா முழுவதும் பரவிக் கிடக்கிறது. சமீபத்தில் அவர் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரமானந்தத்துடன் ஜோடி சேர்ந்து நடித்த கிருஷ்ணார்ஜூனா படம் மெகா ஹிட் ஆகி விட்டது. இதனால் புவனேஸ்வரிக்கு ஏக கிராக்கி.

இதுவரை தெலுங்கு சினிமாக்களில் குத்தாட்டம் மட்டுமே போட்டு வந்த புவனேஸ்வரிக்கு கவுரவ(?) கவர்ச்சி தோற்ற வாய்ப்புகளும் வரத் துவங்கியுள்ளன. அடுத்த 2 வருடங்களுக்கு புவனேஸ்வரியிடம் கால்ஷீட் இல்லையாம். புவனேஸ்வரியின் அசுர வளர்ச்சியால் மோனலிசா, முமைத்கான் போன்ற தெலுங்கு குத்தாட்ட நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொசுறு தகவல் : நடிகை முமைத்கான் ரஜினியின் குசேலன் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!