CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-11

கிளாமர் டிரஸ் அணிவது ஏன்? நமீதா விளக்கம்


பொது விழாக்களுக்கு வரும்போது கிளாமராக டிரஸ் போடுவது ஏன்? என்பதற்கு நடிகை நமீதா விளக்கம் கொடுத்துள்ளார்.

நமீதா என்றாலே கவர்ச்சி மலை என்று எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் மட்டுமல்ல பொது இடங்களுக்கு வந்தாலும் இவர் படு கவர்ச்சியாகவே உடையணிந்து வருவார். இதனால் இவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும். அதேநேரத்தில் பொதுநிகழ்ச்சி என்று அழைத்தால் என்ன ஏதுவென்று விசாரிக்காமலேயே ஓ.கே. சொல்லும் நட்சத்திர பட்டியலில் நமீதாவுக்குத்தான் நம்பர் ஒன் இடம் கொடுக்க னேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க ஆவலுடன் இருப்பார் நமீதா. (கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டினப்பாக்கத்தில் மாநகராட்சி கழிப்பிடத்தை நடிகை நமீதா திறந்து வைத்தது நினைவிருக்கலாம்)

கவர்ச்சி விருந்து படைப்பதற்காகவே பிறந்தவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு கிளாமராக வரும் நடிகை நமீதாவின் பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது. சொந்த ஊருக்கோ, சூட்டிங்கிற்கோ போகாமல் ஆதரவற்‌ற குழந்தைகளுடன் கேக் வெட்டி ‌கொண்டாடினார். சென்னை தீவுத்திடலில் நடக்கும் ஸ்நோ பால் நிகழ்ச்சிக்கு ஆதரவற்ற குழந்தைகளுடன் வந்த நமீதா வந்ததும் அத்தனைபேரின் கண்களும் நமீதா மேல்தான். இதற்கு காரணம், வழக்கம்போலவே அகன்று விரிந்த தோள்பட்டையையும், வாழைத்தண்டு போன்ற கால்களையும் வெட்ட வெளிச்சமாக காட்டும் உடையணிந்து வந்ததுதான்.

நமீதாவை பார்த்ததும் பத்திரிகை போட்டோகிராபர்கள் கேமராவை கிளிக்கோ கிளிக் என்று கிளிக்கினார்கள். இதில் தள்ளுமுள்ளுவும் (நல்லவேளை தில்லுமுல்லு நடக்கவில்லை) ஏற்பட்டது. ஸ்நோ பாலில் உள்ள பனிமழைக்கு சென்று நமீதா நனைந்து குதூலித்தார். இதை பார்த்த ரசிகர்கள் கூட்டம் நமீதானை நெருங்க ஆரம்பித்தனர். அதை ‌பார்த்த போலீசார் நமீதாவை பத்திரமாக அழைத்து செல்ல முயன்றனர். ரசிகர்கள் ரொம்பேவே முண்டியடித்ததால் போலீசார் லத்தியை சுழற்ற வேண்டிய சூழ்நிலை உருவானது. ஒருவழியாக கூ‌ட்டத்தை கலைத்து நமீதாவை மீட்டெடுத்தனர் போலீசார்.

இப்படி கிளாமராக உடையணிவதால்தானே இவ்வளவு பிரச்சினை. எதற்காக இப்படியெல்லாம் டிரஸ் போடுகிறீர்கள்? என்று நமீதாவிடம் கேட்‌டபோது, டிரஸ் போடுவது என் இஷ்டம். இதுபோல டிரஸ் அணிவது எனக்கு பிடிக்கும். அதேநேரத்தில் இதுதான் ப்ரீயாகவும் இருக்கும். ஒரு நடிகை என்றாகி விட்டால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். எனக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் கூட்டம் அதிகமாக கூடிவிடுகிறது, என்றார்.

அவுதும் சரிதான்(?).

(வாசகர்கள் கவனத்திற்கு: கடந்த 4 நாட்களாக ‌நெட் பிரச்னையால் சினிமா செய்திகளை கொடுக்க முடியவில்லை. இனி தினமும் உங்களுக்கு செய்திச்சேவை தொடரும். வாசகர்கள் செய்திகளை படித்து முடித்ததும் இங்கே வெளியிட்டுள்ள விளம்பரங்களிலும் ஒரு கிளிக் கிளிக்கி நிருபர் வலைதள வளர்ச்சியில் பங்கெடுப்பீர்கள் என்று நம்புகிறேன் - சினிமா நிருபர்)

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!