கிக் பாடல்கள் என்றாலே அதை கேட்பதிலும், பார்த்து ரசிப்பதிலும் தனி கிக்தான். அதுவும் சூப்பர் ஸ்டார் தோன்றும் பாடல் என்றால் சும்மாவா? ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத்தான்...! என்ற பாடல் அந்த கால கட்டத்திலேயே சக்கை போடு போட்டது.
இப்போதைய ரீமேக் சீசனில் இந்த கிக் பாடலும் ரீமேக் லிஸ்டில் இடம்பிடித்து விட்டது. டான்ஸ் மாஸ்டராக திரைக்களத்துக்குள் குதித்து, ஒரு பாட்டுக்கு ஆட்டம் ஆடும் நடிகராக உயர்ந்து தற்போது ஹீரோ அந்தஸ்து பெற்றிருக்கும் லாரன்சும், புன்னகை இளவரசி சினேகாவும் ஜோடி சேர்ந்து நடிக்கும் பாண்டி படத்தில்தான் மாசி மாசம் பாட்டு இடம்பெறவிருக்கிறது.
இந்த பாடல் காட்சிக்காக, ஏவி.எம்.ஸ்டூடியோவில் 10க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. வயல், வண்டி, வீடு, கிணறு, மரத்தால் அமைந்த பரண், குடிசை... இப்படி மாறுபட்ட பத்து அரங்குகளில், கதாநாயகன் லாரன்ஸ், கதாநாயகி சினேகா ஆகிய இருவரும் ஆடிப்பாடினார்கள். இரண்டு பேரும் 15 விதமான உடைகளில் தோன்றினார்கள். சினேகா கவர்ச்சி உடை அணிந்து, லாரன்சுடன் நெருக்கமாக நடனம் ஆடினார்.
வேகமாக தயாராகி வரும் இந்த படத்தில் நமீதா, நாசர், கஞ்சா கருப்பு, ஸ்ரீமன், இளவரசு, ராஜ்கபூர், வையாபுரி, மயில்சாமி, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய்து வருகிறார், மதுரவன். நான் அவன் இல்லை, அஞ்சாதே ஆகிய படங்களை தயாரித்த வி.இத்தேஷ் ஜபக், நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!