CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-04

ரஜினியின் குசேலனில் சினேகா கிளாமர் ஆட்டம்



நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் குசேலன் படத்தில் புன்னகை இளவரசி சினேகாவின் கிளாமர் ஆட்டம் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சிவாஜி என்ற பிரமாண்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் குசேலன். மலையாளத்தில் கதபறயும்போள் என்ற பெயரில் மம்முட்டி நடித்த படம்தான் தமிழில் குசேலன் என்ற பெயரிலும், ‌தெலுங்கில் குசேலரு என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை டைரக்டர் பி.வாசு இயக்கி வருகிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன.


ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரைப் பற்றிய இப்படத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகவே நடிக்கிறார். நடிகர் பசுபதி ரஜினியின் கிராமத்து நண்பர் வே‌டத்தில் நடிக்கிறார். பசுபதி கிராமத்தில் சலூன் கடை வைத்திருப்பவராகவும், அவருக்கு போட்டியாக எதிரிலேயே சலூன் கடை திறந்து அல்லோலப்படும் கேரட்டரில் வடிவேலுவும் நடிக்கிறார்கள். இதெல்லாம் ஏற்கன‌ே‌வே வெளிவந்த தகவல்தான்.


தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குசேலன் படத்தில் நடிகை சினேகா நடிக்கிறார் என்று ஒரு சில பத்திரிகைகளும், சினேகா நடிக்கவில்லை என்று இன்னும் சில பத்திரிகைகளும் எழுதி வருகி்ன்றன. குசேலனில் சினேகா நடிக்‌கிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை சினேகா குசேலன் படத்தில் நடிகையாகவே நடிக்கிறார். ரஜினியுடன் அவர் சூட்டிங்கில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. சினேகாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆடும் டூயட்டும் படத்தில் இடம் பெறுமாம்.


சமீப காலமாக நடிகை சினேகா கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரை கூட்டி வருகிறார். இதனால் குசேலனிலும் அம்மணி தொப்புள் தெரிய ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார் என்ற உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட கால ஆசை நிறைவேறப்போகிற குஷியில் இருக்கும் சி‌னேகா, ரஜினிக்காக கொஞ்சம் கிளாமராக நடிப்பார் என்று நம்பலாம்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!