CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-24

தனுஷ் குடும்பத்தில் டைரக்ஷன் மோகம்


பொதுவாக இளம் நடிகர்களுக்கு படம் இயக்க ஆர்வம் ஏற்படுவது சகஜம். ஆனால், தனுஷ் குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக எல்லோருமே படம் இயக்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனுசுக்குள் இருந்து வந்த இயக்குனர் ஆர்வம், தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. சொந்தமாக ஒரு கதையை தயார் செய்துவைத்துள்ள தனுஷ், அடுத்த ஆண்டின் இறுதியில் இயக்குனர் அவதாரம் எடுப்பது உறுதியாகி விட்டதாம். இதற்காக நாயகன், நாயகியையும் தேர்வு செய்து வைத்துள்ளார். அந்த நடிகரின் நடிப்பில் திருப்தி இல்லாத பட்சத்தில், தனுஷே ஹீரோ அவதாரமும் எடுப்பாராம்.

இதற்கிடையே, தனுசின் மனைவி ஐஸ்வர்யாவும் படம் இயக்குவது குறித்து தொழிற்நுட்பங்களை கற்று வருகிறாராம். அடுத்த வருடம் தனுஷ் படம் இயக்கும் போது, இணை இயக்குனராக பணிபுரிவாராம்.

ஏற்கனவே, தனுசின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவனுடன் இணைந்து சோனியா அகர்வாலும் டைரக்ஷன் பற்றிய தொழிற்நுட்பங்களை கற்று வருகிறாராம். தனுசின் தந்தை கஸ்தூரி ராஜா பிரபலமான இயக்குனர் என்பதும், ஐஸ்வர்யாவின் சகோதரி சவுந்தர்யா ரஜினியின் 'சுல்தார் தி வாரியர் அனிமேஷன்' படத்தை இயக்கி வருவதும் தெரிந்த விஷயம்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!