2008-05-15
ரஜினியின் ரோபோ : ஷங்கர் போடும் பிசினஸ் கணக்கு
பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுத்த படம் சிவாஜி. கறுப்பு பணத்தை கதைக் கருவாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்ததுபோலவே பிரமாண்ட வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணி இணையும் படம் ரோபோ. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார். ஐங்காரன் நிறுவனமும், ஈரோஸ் மல்டி மீடியாவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான படஜெட்டில் இப்படம் எடுக்கப்படவிருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகிறது.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்களை டைரக்டர் ஷங்கர் விரைவில் அறிவிக்க உள்ளார். ரஜினிகாந்த் தற்போது குசேலன் படப்பிடிப்பில் இருப்பதால், இப்படம் முடிந்த பின்னர் ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் ரோபோ சூட்டிங் தொடங்கும் என்று ஐங்காரன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினி தற்போது கெஸ்ட் ரோலில் நடித்து வரும் குசேலன் படம் ரூ.60 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள குசேலனே ரூ. கோடிஎன்றால், முழுக்க முழுக்க ரஜினிகாந்துக்காக உருவாக்கப்பட்ட ரோபோ படத்தின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்று டைரக்டர் ஷங்கர் இப்போதே பிசினஸ் கணக்கு போடத் தொடங்கி விட்டாராம். ரோபோ படத்தின் மார்க்கெட் உச்சத்துக்கு எகிறியிருப்பது பற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!