CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-20

ரஜினி ரசிகர்களின் ஆவேச வேண்டுகோள்


ரஜினி ரசிகர்கள் ஆவேசப்படுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே‌யொரு காரணம்தான் இருக்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற வற்புறுத்தல்தான் இந்த ஆவேசத்துக்கு காரணமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரகசியமாக ஒரு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த கூட்டம் குறி்த்து விழுப்புரத்தில் நிருபராக உள்ள எனது நண்பர் வஸந்த் அவர்களிடம் போனில் கேட்‌‌‌டேன். அவர் தெரிவித்த கூறிய விவரங்கள் உங்களுக்காக....

விழுப்புரத்தில் உள்ள வி.வி.ஏ. லாட்ஜில் நடந்த இந்த கூட்டத்தில் 30 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பேசுகையில், தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பது குறித்து ஆவேசமாக பேசினார்கள். தலைவா... நீங்கள் அரசியலை விட்டு விலகி இருப்பது ஏன்? அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா, இல்லையா?, ரசிகர்களால் உங்களை சந்திக்க முடியவில்லையே, உங்களை பார்க்க ரசிர்களுக்கு தடை போடுவது ஏன்? என்று பல கேள்விகளை எழுப்பி நிர்வாகிகள் பேசினார்கள்.

பின்னர் வருகிற ஞாயிறன்று 10 பேர் அடங்கிய குழு ரஜினியை சந்தித்து கலந்தாலோசிப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comments:

* கடிக்கலாம் வாங்க * said...

போங்கடா! வெட்டிப்பசங்களா, உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? எவன் அரசியலுக்கு வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? ஒழுங்கா வேலை செஞ்சி வீட்டையும் , நாட்டையும் காப்பாத்துங்க ஐயா! புண்ணியாமா போகும்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!