CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-13

சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் பி்ல்லா பார்ட் 2




1980களில் ரஜினிகாந்த் நடிப்பில் சக்கை போடு போட்ட பில்லா படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜித் நடித்தார். இந்த படமும் வசூலை வாரி குவித்தது. அல்டிமேட் ஸ்டார், ஆசை நாயகன், காதல் மன்னன் என்று பல பட்டங்களைப் பெற்ற அஜித்தின் துடிப்பான நடிப்பு, இளைஞர்களின் நாடி துடிப்பை எகிற வைத்த நயன்தாராவின் கிளுகிளுப்பு என படத்தின் வெற்றிக்கு பல காரணங்களை சொல்லலாம்.

பில்லா படத்தின் ரீமேக் படமும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பில்லா பார்ட் 2 தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை தீட்டியிருப்பவர் வேறு யாருமல்ல... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாதான். அவர் நடத்தி வரும் ஆங்கர் என்ற அனிமேஷன் நிறுவனம் தற்போது ரஜினியின் நடிப்பில் சுல்தான் தி வாரியர் படத்தை எடுத்து வருகிறது. இப்படத்தில் ரஜினியைத் தவிர மற்ற அனைத்து கேரக்டர்களுமே அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் அடுத்த பிரமாண்ட படமான ரோபோ படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் ஆங்கர் நிறுவனத்துக்குத்தான் வரும் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில் பில்லா பார்ட் 2 படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் சவுந்தர்யா ரஜினி. ரீமேக் பில்லா டீமை அப்படியே பார்ட் 2க்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, நமீதா உள்ளிட்டோரிடம் ‌பேசி வருகிறார்.


பில்லா பார்ட் 2 எடுத்தும் ஐடியாவை சவுந்தர்யாவுக்கு கொடுத்தது சூப்பர் ஸ்டார்தான் என்ற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக அடிபடுகிறது. இதனால் குஷியான அஜித் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது ராஜுசுந்தரம் இயக்கத்தில் ஏகன் படத்தில் நடித்து வரும் அஜித், அந்த படத்தின் சூட்டிங் முடித்ததும் பில்லா பார்ட் 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.


கொசுறு தகவல் : பில்லா படம் கேன்ஸ் பட விழாவில் வருகிற 18ம் தேதி திரையிடப்படுகிறது. இதற்காக டைரக்டர் விஷ்ணுவர்தன் ஏற்கனவே கேன்ஸ் சென்று விட்டார். நடிகர் அஜித்தும் ஏகன் சூட்டிங்கை ரத்து செய்து விட்டு கேன்ஸ் செல்லவிருக்கிறாராம்.


(குறிப்பு : எனது படைப்புகளை படிக்கும் வாசகர்கள் இங்கே வெளியிட்டுள்ள விளம்பங்கள் மீதும் ஒருமுறை சொடுக்கி, நிருபர் பிளாக்கின் வளர்ச்சியில் பங்கெடுப்பீர்கள் என்று நம்புகிறேன் - சினிமா நிருபர்)

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!