சினிமா வரலாறு துவங்கிய காலங்களில் நடிகைகளின் கை, கால்களைக் கூட பார்ப்பதற்கு ரசிகர்கள் தவம் கிடக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ... நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. ஸ்ரேயா, நமீதா போன்ற நடிகைகள் சினிமாவில்தான் படுகவர்ச்சியாக தோன்றுகிறார்கள் என்றால் வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அதைவிட கவர்ச்சியாக தோன்றுகிறார்கள். இப்படி ரசிகர்களுக்கு நேரடி கவர்ச்சி விருந்து படைக்கும் நடிகைகள் பல சமயங்களில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதில் கடைசியாக சிக்கியவர் நடிகை ஸ்ரேயா.
சிவாஜி பட வெற்றி விழாவுக்கு வந்த நடிகை ஸ்ரேயா டூ பீஸ் உடையில் தோன்றினார். தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஸ்ரேயா இப்படி காட்சியளித்தது முகம் சுழிக்க வைத்தது என்னவோ உண்மைதான் (எனக்கெல்லாம் முகம் சுழிக்கவே இல்லை). இதையடுத்து ஸ்ரேயா ஆபாச உடை பிரச்னை பத்திரிகைகளுக்கு சில நாட்கள் தீனி போட்டது. கோலிவுட் நிலைமையே இப்படி என்றால், பாலிவுட்டில் இன்னும் நிறைய கேவலங்கள் அரங்கேறுகின்றன.
இந்நிலையில் தசாவதாரம் விழாவில் பங்கேற்ற பலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். முதல்வர் கருணாநிதி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கறுப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்த மல்லிகா ஷெராவத் தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து விட்டதாக இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னொருவேடிக்கை என்னவென்றால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கும் இப்பிரச்னையில் தொடர்பு உள்ளது. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் செய்திருப்பதுதான்.

0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!