CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-22

நயன்தாரா மீது ஆசைப்படும் நடிகர்


ஐயா படத்தில் அழகான கிராமத்து குயிலாக தோன்றி, பில்லா படத்தில் தோலுரித்த கோழியாகி ரசிகர்களை டிசைன் டிசைனாக குஷிபடுத்த தெரிந்தவர் நடிகை நயன்தாரா. சாதாரணமாக நடிப்பதென்றால் ஒரு சம்பளம், கொஞ்சம் கிளாமர் காட்ட ஒரு சம்பளம், பில்லா ‌போன்ற கிளாமருக்கு ஒரு சம்பளம் என்று சம்பளக் கணக்கு வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

பில்லாவுக்கு பிறகு மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவை வளைத்து போட பலரும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிரபல இயக்குனர்களில் தொடங்கி புதுமுக இயக்குனர்கள் வரை பல இயக்குனர்கள் நயனிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நயனும், ஓ.கே.வும் செல்லாமல், மறுப்பும் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் பல டைரக்டர்கள் நயன் கால்ஷீட் தருவாரா, மாட்டாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்த குழப்பமான வட்டத்துக்குள் நடிகர் ஜீவனும் சிக்கியிருக்கிறார் என்பதை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?. நடிப்பில் தனக்கென ஒரு ஏ இமேஜ் வைத்திருக்கும் நடிகர் ஜீவன் தான் அடுத்து நடிக்கவுள்ள கிருஷ்ண லீலை படத்துக்கு நயன்தாராவை நாயகியாக்க ஆசைப்பட்டார். இதையடுத்து படத்தின் இயக்குனர் ஸெல்வன், நயனிடம் கால்ஷீட் கேட்க சென்றுள்ளார். ஆனால் நயனின் மேனேஜரே அந்த இயக்குனருக்கு பதில் சொல்லி அனுப்பி விட்டாராம். நயன் தனக்கு ஜோடியாக கிடைப்பாரா, மாட்டாரா? என்ற கவலையில் இருக்கிறார் நடிகர் ஜீவன்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!