CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-30

குசேலன் ரீலிஸ் எப்போது? : பி.வாசு பேட்டி


குசேலன் ரீலிஸ் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் டைரக்டர் பி.வாசு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் குசேலன். இந்த படத்தை டைரக்‌டர் பி.வாசு இயக்கி வருகிறார். நடிகர்கள் பசுபதி, வடிவேலு, நடிகைகள் நயன்தாரா, மீனா உள்பட பலர் குசேலனில் நடித்து வருகிறார்கள்.
குசேலன் சூட்டிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி குறித்து டைரக்டர் பி.வாசுவிடம் கேட்‌டோம். அவர் கூறியதாவது:-

குசேலன் படத்தை ஆரம்பத்தில் சிறிய அளவில்தான் எடுக்க நினைத்தோம். ரஜினிகாந்த்திடம் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்குமாறு முதலில் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். பின்னர் கதையை கேட்ட பின்னர் ஆர்வத்துடன் சூட்டிங்கில் பங்கேற்றார். அவர் அதிக ஆர்வம் கொண்டதால் மலையாள கதபறயும்போள் கதையை கொஞ்சம் மாற்றி, ரஜினிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்‌தோம். அதன்படி கதை மாற்றப்பட்டது.

குசேலன் படத்தின் சூட்டிங் ஐதராபாத், ‌பொள்ளாச்சி, கோபி‌செட்டி பாளையம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. இறுதிகட்ட சூட்டிங் போய்கொண்டிருக்கிறது. ரீலிஸ் தேதி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகி்ன்றன. ஆனால் நாங்கள் இதுவரை தேதியை முடிவு செய்யவில்லை.
குசேலன் சூட்டிங்கை ஜூன் 15ம் தேதிக்கு முன் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஜூன் 15ம்தேதி பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறேன். அப்போது ஆடியோ வெளியீடும் தேதி மற்றும் குசேலன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

Anonymous said...

Your blog is very creative, when people read this it widens our imaginations.

Anonymous said...

குசேலன் ரீலீஸ் எப்போது நிருபரே?

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!