2008-05-25
சூட்டிங்கில் விபத்து : நடிகை மிதுனா கால் முறிந்தது
மாமதுரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மிதுனா. இவர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதய், ரஞ்சன் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள்.
நடிகை மிதுனா, படத்தின் நாயகர்களுடன் சேர்ந்து ஆடுவது போன்ற ஒரு பாடல் தீவயன் படத்தில் இடம்பெறுகிறது. இதற்கான சூட்டிங் சென்னையில் நடந்தது. அப்போது டான்ஸ் ஒத்திகை நடந்தபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த நடிகை மிதுனாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக தீயவன் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது.
(நடிகை மிதுனா ரசிகர்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்பதால்தான் தீயவன் படத்தின் சில காட்சிகளையும் இணைத்துள்ளேன்.)
Labels:
shooting spot
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!