சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சத்தமில்லாமல் எத்தனையோ நற்காரியங்களை செய்து வருகிறார். இந்த வரிசையில் இன்னொரு நற்காரியமும் சேர்ந்துள்ளது.
பெங்களூருவில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜிராவ் கெய்க்வாட், சென்னை வந்து ரஜினிகாந்தாக உருவெடுத்தார். கடுமையான உழைப்பின் காரணமாக இன்று உலகமே போற்றும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கும் ரஜினிகாந்த், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பொதுநிகழ்ச்சிகளுக்கு போகும்போது மற்ற நடிகர்களைப் போல மேக்கப் போட்டுக் கொள்ளாமல் வெளிப்படையாக இருக்கும் ரஜினிகாந்த், தான் செய்யும் நற்காரியங்களை மட்டும் ரொம்பவே ரகசியமாக வைத்துக் கொள்வார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். இந்த பழமொழி ரஜினிகாந்துக்கு மிக மிக பொருத்தமாக இருக்கும். உதவி தேவை என்று கேட்காவிட்டாலும், உதவி தேவை என்பதை உணர்ந்தால் வீடு தேடி வரும் உதவி. இது சூப்பர் ஸ்டாரின் தனி வழி.
சரி விஷயத்துக்கு வருவோம். டான்ஸ் மாஸ்டராக தமிழ் திரையுலகில் கால் பதித்த லாரன்ஸ், நடிகர் அவதாரம் எடுத்து பின்னர் இயக்குனர் அவதாரத்தையும் எடுத்து விட்டார். ரஜினிகாந்த் விரும்பி வணங்ககும் ராகவேந்திரரின் தீவிர பக்தரான லாரன்ஸ் தனது பெயரில் ராகவா என்பதையும் சேர்த்து ராகவா லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டார். இந்த விஷயம் ரஜினியை மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ராகவா லாரன்சுக்கு போன் செய்த ரஜினிகாந்த், தன்னை வந்து பார்க்குமாறு அன்பு கட்டளையிட்டார். இதனை ஏற்று ரஜினி முன்ஆஜரான லாரன்சுக்கு இன்ப அதிர்ச்சி. லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு ஆயுட் காலம் முழுவதும் சாப்பாட்டு செலவை நான் தருகிறேன் என்று கூறினார் ரஜினிகாந்த். லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் என 45 பேர் இருக்கிறார்கள். இந்த இல்லத்தில் தங்கியுள்ள பல ஊனமுற்ற இளைஞர்கள் நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள். (லாரன்ஸ் அந்த அளவு பயிற்சி கொடுத்திருக்கிறார்) இதன் மூலம் அவர்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது. இதுபற்றி கேள்விப்படதன் விளைவுதான் ரஜினியின் உதவிக்கரம் நீண்டதற்கு காரணமாம்.
ஏதாவது சிறு உதவி செய்தாலே பத்திரிகைகளுக்கு புகைப்படத்தை அனுப்பி போடச் சொல்லி, தங்களைத் தாங்களே பிரபல படுத்திக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரொம்பவே வித்தியாசமானவர் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கொசுறு தகவல்: ரஜினி தற்போது நடித்து வரும் குசேலன் படத்தில் ஒரு பாடலுக்கு ராகவாதான் டான்ஸ் மாஸ்டர். இதற்கு முன்பு பாபா, சிவாஜி படங்களில் ரஜினியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் பணியாற்றியுள்ளார்.
2008-05-02
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Pullarikkuthu. Full adichathaan sariya varum.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!