2008-05-17
ரஜினியின் சுல்தான் படம் : ஸ்பெஷல் ரிப்போர்ட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முறையாக நடிக்கும் அனிமேஷன் படம் சுல்தான் தி வாரியர். இந்த படம் குறித்த ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு:-
சுல்தான் தி வாரியன் படம் ரஜினியின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆங்கர் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் அட்லாப்ஸ், வார்னர் பிரதர்ஸ் ஆகியவற்றின் கூட்டுத்தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குபவர் சவுந்தர்யாதான்.
மகளின் ஆசைக்காக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார். சுல்தான் படத்தின் ரஜினியைத் தவிர நடிக்கும் மற்ற அனைவருமே அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள கேரக்டர்கள்தான். கதாநாயகியாக யாருடைய சாயலும் இல்லாத மிக மிக அழகான பெண்ணை உருவாக்கியிருக்கிறார்களாம்.
இந்த படம் உலக சந்தைக் போவதன் மூலம் முதன் முறையாக உலக சந்தைக்கு போகும் தமிழ் படம் என்ற பெருமையைப் பெறுகிறது. அதே நேரத்தில் சுல்தான் படத்தின் பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. இந்த படத்தை எடுப்பதற்கு ரூ.70 கோடி வரை செலவிட்டிருக்கிறார்களாம். இதன் மூலம் இந்தியாவில் அதிக படஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் அனிமேஷன் படம் என்ற பெருமையையும் சுல்தான் பெறுகிறது.
இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிருபரின் டைரியை புரட்டிப் பார்க்கும்போது, முதலில் சுல்தான் படத்தை ரூ.70 லட்சம் செலவில்தான் தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார் என்று தெரியவருகிறது. சிவாஜியின் பிரமாண்ட வெற்றியால் அல்டாப் மற்றும் வார்னர் நிறுவனங்கள் சவுந்தர்யாவின் ஆங்கருடன் கூட்டு சேர்ந்து கூடுதல் பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்தனர். இப்போது ரூ.70 லட்சம் ரூ.70 கோடியாக உயர்ந்து விட்டது. பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் படத்தில் பல பிரமாண்ட காட்சிகள் இடம்பெறும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்போது குசேலன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது. குசேலன் படம் வெளியான பிறகு ரோபோ படம் வர எப்படியும் ஒரு வருடம் ஆகும். அந்த இடைவெளி காலத்தில் சுல்தானை திரைக்கு கொண்டு வர சவுந்தர்யா முடிவு செய்திருக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது. இந்த அனிமேஷன் படம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் திருப்தி படுத்தும் வகையில் இருக்கும் என்று சவுந்தர்யா ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!