2008-05-27
இந்தியில் தமிழ் நடிகரின் மார்க்கெட் உயர்வு
ஒரு தமிழ் சினிமாவில் நடிக்க ரூ.75 லட்சம் வரை சம்பளம் பெற்று வரும் நடிகர் மாதவனின் மார்க்கெட் இந்தியில் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தமிழில் யாவரும் நலம், குரு என் ஆளு படங்களில் நடிக்கும் நடிகர் மாதவன், இந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அடுத்து, அமீர்கான் கவுரவ வேடம் ஏற்கும் மற்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவ்விரு படம் தவிர இன்னொரு படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ள மாதவன், இந்தியில் ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
இதற்கிடையில், நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஜோடியாக மாதவன் நடிக்க இருந்த என்றென்றும் புன்னகை படம் கைவிடப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி மாதவனிடம் போனில் கேட்டோம். ஸ்ருதியுடன் இணைந்து நடிக்க நான் தயாராகத்தான் இருந்தேன். இருப்பினும் ஏனோ சில காரணங்களை சொல்லி படத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நான் தற்போது தமிழிலும், இந்தியிலும் பிஸியாகத்தான் இருக்கிறேன். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை, என்றார்.
Labels:
Madhavan
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!