2008-05-14
ஐந்தாவது முறையாக பெயரை மாற்றிய நடிகை
அரசியல்வாதிகள் எப்படி பெயரில் உள்ள எழுத்துக்களை நியூமராலஜிபடி அடிக்கடி மாற்றுகிறார்களோ... அதேபோல சினிமாவில் நடிகைகள் தங்களது பெயர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்த அனிதா, பாய்ஸ் ஹரிணி, மழலை நட்சத்திரமாக இருந்த கல்யாணி உள்ளிட்ட ஏராளமான நடிகைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த வரிசையில் அதிகமுறை பெயரை மாற்றிய நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஒரு நடிகை. அவர் பெயர் இப்போது ஆதிரா. பெயரை பார்த்து பயந்து விடாதீர்கள். அகரம் படத்தில் சீதாவாக தேன்றியவர்தான் இந்த ஆதிரா. அதற்கு பிறகு கண்ணும் கண்ணும் படத்தில் கவிதாவாகவும், மலரினும் மெல்லிய படத்தில் வர்ஷிணியாகவும், அச்சச்சோ படத்தில் ப்ரியஸ்ரீயாகவும் தோன்றினார். இப்போது ஐந்தாவது முறையாக தனது பெயரை ஆதிரா என்று மாற்றியிருக்கிறார்.
இவர் தற்போது நடித்து வரும் படம் மாணவன் நினைத்தால்...! மாணவ பருவ நிகழ்வுகளையும், மாணவர்களின் லட்சியங்களையும் தத்ரூபமாக எடுத்துக்காட்டும் இப்படத்தை டைரக்டர் எஸ்.பி.ஞானமொழி இயக்குகிறார். ரத்தீஷ்குமார்தான் நாயகன். ஆதவன் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கே.பாக்யராஜ், மனோபாலா, பாண்டு, நளினி உள்ளிட்ட மூத்த நட்சத்திரங்களும் இடம்பெறுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!