த்ரிஷா கிளாமராக இருக்கிறாரா, இல்லையா என்ற பட்டிமன்றத்துக்கு முன்பு த்ரிஷாவின் வாழ்க்கை பயணத்தை நிருபரின் டைரியில் இருந்து கொஞ்சம் பார்ப்போம்.
1999ம் ஆண்டு ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து திரைக்களத்தில் குதித்த த்ரிஷாவுக்கு, 2000ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றார். இந்த பட்டத்துக்கு பிறகு த்ரிஷா காட்டில் அடைமழை பெய்யத் துவங்கியது. லேசா லேசா, மனசெல்லாம், மவுனம் பேசியதே ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. இந்த படங்கள் 2002ம் ஆண்டில் வெளியாயின. 2003ம் ஆண்டு விக்ரமுடன் ஜோடி போட்டு மாமியாக நடித்த சாமி படம் செம ஹிட் ஆனது. 2004, 2005 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக திகழ்ந்த த்ரிஷா அடுத்தடுத்து வந்த புதுமுகங்களால் பின்னுக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் த்ரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழை விட தெலுங்கில் த்ரிஷாவுக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன.
சரி..! விஷயத்துக்கு வருவோம்...! தற்போது நடிகை த்ரிஷா கவர்ச்சியை(?) துளிகூட காட்டாமல் இழுத்து போர்த்திக் கொண்டு ஓரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் மொழிக்கு பிறகு ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அபியும் நானும் படம்தான். ஒரு பெண் குழந்தை பிறந்து, வளர்ந்து, திருமணம் ஆகும் வரை அதன் தந்தைக்கு ஏற்படும் அனுபவங்கள்தன் அபியும், நானும் படத்தின் கதை. அப்படி ஒரு யதார்த்தமான அப்பாவாக வாழ்த்து காட்டுபவர் பிரகாஷ்ராஜ்தான்.
இந்த படத்தில் குழந்தை, சிறுமி, பள்ளி மாணவி, கல்லூரி மாணவி என பல்வேறு பருவங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. குடும்பப்பாங்கான பெண் கேரக்டரில் நடித்திருக்கும் த்ரிஷாவுக்கு இப்படத்தில் எள்ளளவும் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லையாம். (குருவியி்ல் சுளுக்கு எடுக்கும் காட்சியை ரசித்தவர் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான்). தனது சினிமா கேரியரில் இந்த படம் ரொம்பவும் வித்தியாசமானது என்பதுதான் அபியும் நானும் படம் பற்றிய த்ரிஷாவின் கருத்து.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!