CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-07

நடிகைகளை துரத்தும் செக்ஸ் டார்ச்சர் : ஸ்பெஷல் ரிப்போர்ட்


சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு அளிக்கப்படும் செக்ஸ் டார்ச்சர்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இதுபற்றிய ஒரு அலசல்தான் இந்த கட்டுரையின் நோக்கம்.


கட்டுரையை எழுதத் துவங்கும் முன் தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் புகழ்பெற்ற நடிகையான கே.பி.சுந்தராம்பாள் குறித்து நிருபரின் டைரியில் இருந்து சில வரிகள்....! (செக்ஸ் டார்ச்சருக்கும்.... கே.பி.சுந்தராம்பாளுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்பவர்களுக்கு இக்கட்டுரை முடிவில் விடை கிடைக்கும்)


கொடுமுடி கோகிலம் என்ற கே.பி. சுந்தராம்பாள் இளவயதில் சுந்தராம்பாள் வேலுநாயர் ராஜாமணி அம்மாள் நாடக குழுவினர் நடத்திய நல்லதங்காள் என்ற நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை ஏற்று நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாக பாடி ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றார். 1926ம் ஆண்டு சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் என்ற நாடகம் அரங்கேறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1933ம் ஆண்டு கிட்டப்பா தனது 28 வயதில் காலமானார். அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்று முதல் அவர் வெள்ளை சேலை கட்ட துவங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்ட காலமாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த சுந்தராம்பாள் 1934ம் ஆண்டு நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.


எந்தவொரு ஆணுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்‌டேன் என்ற உறுதியுடன் நடிகை ஒருவர் இருந்தது அந்தக்காலம்.


ஆனால் இன்று...! நம் நடிகைகள் பொது விழாக்களில் அணியும் அரைகுறை ஆடைகள் மேலைநாட்டுப் பாணியை பின்பற்றியே இருக்கிறது. இதுதான் செக்ஸ் டார்ச்சருக்கு முதல் காரணமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை நமீதா கவர்ச்சிகரமான ஆடையணிந்து வந்தபோது, அவரை பார்க்க வந்த ரசிகர் பட்டாளத்தில் ஒருவர் நமீதாவின் மேல் கை வைத்தார். தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது. இதுவே நடிகைகளின் கவர்ச்சி ஆடையால் ஏற்படும் பிரச்னைக்கு முன் உதாரணம். சினிமாவில் தோன்றுவதை விட படுகவர்ச்சியான உடையணிந்து பொது விழாவுக்கு வருவதை தவிர்த்தாலே ‌பாதி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது என் கருத்து.

இதேபோல முன்‌பெல்லாம் சினிமாவில் கவர்ச்சியாக நடிபதற்கு என்று ஒன்றிரண்டு நடிகைகள் மட்டுமே இருந்தனர். ஆனால் இன்றோ ஹீரோயினியாக அறிமுகமாகும் அனைத்து நடிகைகளுமே போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியை காட்டுகிறார்கள். இது ரசிகர்களை உசுப்பேற்றுகிறதோ இல்லையோ... படத்தை எடுப்பதில் முக்கிய பிரமுகர்களாக இருப்பவர்களை கண்டிப்பாக உசுப்பேற்றும் என்பதில் ஐயமில்லை.


மேலும் நடிகை ஸ்ரேயா, மல்லிகா ஷெராவத் போன்ற நடிகைகள் முதல்வர் பங்கேற்ற பொது நிகழ்ச்சிக்கு அறை‌குறை ஆடையணிந்து வந்து வழக்குகளில் சிக்கிக் கொண்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
சினிமா உலகமே ஒரு உல்லாச உலகம்தான் என்பது பொதுவான கருத்து. இந்த கருத்தை உறுதி செய்யும் வகையில் ஏராளமானவர்கள் போலீஸ் புகார் வரை சென்றிருக்கிறார்கள். மார்க்கெட் இழந்த வினிதா உள்ளிட்ட நடிகைகள், பல துணை நடிகைகள் விபசாரத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டதே இந்த உல்லாச உலகத்துக்கு சாட்சி. கண்ணுக்கு தெரிந்து இவ்வளவுதான்... கண்ணுக்கு தெரியாமல் நட்சத்திர ஓட்டல் அறைகளிலும், கிழக்கு கடற்கரைச்சாலை பங்களாக்களிலும் எத்தனை எத்தனையோ அசிங்கங்கள் தினம் தினம் அரங்கேறிக் கொண்‌‌டே இருக்கின்றன.


கேட்டது கிடைக்கவில்லையென்றால் இந்த அசிங்கம் வெளிவரத் தொடங்கிவிடும். கடந்த ஆண்டில் புதுமுக இயக்குனர் செல்வா என்பவரை நடிகை சங்கீதா கொலை செய்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அளவுக்கு அதிகமாக செக்ஸ் டார்ச்சர் செய்ததால் செல்வாவை போட்டு தள்ளினேன் என்று சங்கீதா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
(குறிப்பு : அந்த காலத்தில் நடிகைகள் கண்ணியத்துடன் நடந்து கொண்டனர். அதனால் டார்ச்சர் பிரச்னை எதுவும் வரவில்லை. ஆனால் இன்றோ....)


ஒரு கொசுறு : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர தூதர் பொறுப்பில் இருந்து நயன நடிகை நீக்கப்பட்டதற்கும் இந்த செக்ஸ் டார்ச்சர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கும், இந்த கட்டுரைக்கும் தொடர்பு உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் வாசகர்களே!.

1 comments:

Ganeshkumar said...

நிருபர்... இன்றுதான் உங்களோட பழைய பதிவுகளையெல்லாம் பார்த்தேன். நல்லா எழுதியிருக்கிறீங்க. பாராட்டுகள் நிருபர்.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!