புன்னகை இளவரசியாக வலம் வந்த சினேகா இப்படி தொப்புள் தெரிய ஆட்டம் போடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நமீதாவுடன் போட்டி போடும் அளவுக்கு சினேகா கவர்ச்சி தாண்டவம் ஆடியிருக்கும் படம் பாண்டி. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாண்டி படத்தின் முன்னோட்டத்தை இங்கே பார்க்கலாம்.
டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி ஒரு பாட்டு நடிகராக மாறி, நாயகனாகி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அவர் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். சினேகாவும், நமீதாவும் நடிப்பிலும் கவர்ச்சியிலும் ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு கலக்கியிருக்கிறார்கள். இதுவரை கவர்ச்சி காட்டாத சினேகா, இப்படத்தில் கிளுகிளுப்பாக தோன்றி, ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்து இன்ப அதிர்ச்சி தரவுள்ளார்.
பாண்டியின் க்ளைமாக்ஸ் காட்சி சமீபத்தில் திண்டுக்கல்லில் சூட்டிங் செய்யப்பட்டது. இதற்காக 25 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, முப்பது அடி உயர ஐயனார் சிலை அமைக்கப்பட்டு, திருவிழா கடைகள், ராட்டினம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் என ஒரு ஒரு கிராமிய திருவிழாவையே நடத்தி விட்டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள், சூட்டிங்கை காண வந்த பொதுமக்கள் என பெருங்கூட்டமே திரண்டிருந்தது. க்ளைமாக்ஸ் காட்சியில் ராகவ லாரன்ஸ், சினேகா, நமீதா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்தனர்.
இந்த படத்தில் நாசர், சரண்யா, ஸ்ரீமன், இளவரசு, ராஜ்கபூர், வையாபுரி, மயில்சாமி உள்ளிட்ட நடிகர் - நடிகைகளும் நடித்துள்ளனர். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.செந்தில். படத்தொகுப்பு- சுரேஷ் அர்ஸ். படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் டைரக்டர் இராசு. மதுரவன்.
:
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!