CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-06

ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் சிகரம் தொட்டு சாதனை படைத்தது நினைவிருக்கலாம். இந்த சிவாஜியின் சாதனையை ஒரு விஷயத்தில் விஜய்யின் குருவி படம் முறியடித்திருக்கிறது.


ஆம்! அதுவும் சென்னை நகரில்...! சென்னையில் சிவாஜி படம் மல்டிபிளக்ஸ் ஒன்றில் ஒரே நாளில் 25 காட்சிகள் திரையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையைத்தான் குருவி முறியடித்திருக்கிறது. குருவி திரையிடப்பட்ட ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.


இந்த சாதனையை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், குருவி படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய் என்று தலைப்பிட்டதால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக சிவாஜி படைத்த சாதனைச் சிதறல்கள் நிருபரின் டைரியில் இருந்து....


* இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டுடன், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், வெளியான ஒரே படம் சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.
* சிவாஜி படத்துக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.1.70 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. சென்னையில் 17 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்பட்டது.
* செல்போன் நிறுவனத்திருக்கும் செம பிசினஸை கொடுத்தது சிவாஜி. சிவாஜி படத்தின் ட்யூன்களையும், பஞ்ச் வசனங்களையும் காலர் ட்யூன்களாக மாற்றி வெளியிடும் உரிமையை ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம் சிவாஜி படத்தின் ரிங் டோன்கள் மற்றும் காலர் ட்யூன்களை 33 நாடுகளில் 70 நிறுவனங்கள் மூலமாக புழக்கத்தில் விட்டுள்ளது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் டவுன்லோடுகள் வரை செய்யப்பட்டதாக ஹங்கமா தெரிவித்தது.
* அமெரிக்க கண்ட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த படம் சிவாஜிதான்.
* 40 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் வெளியான படம் சிவாஜி. அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ் சிவாஜி 44 மையங்களில் திரையிடப்பட்டது. இதுவரை இப்படி ஒரு படம் இங்கு திரையிடப்பட்டதில்லை.
* இங்கிலாந்தில், யுகே டாப் 10 பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படம் இடம் பெற்ற பெருமையை சிவாஜி நிகழ்த்தியது.
* கனடாவில் மட்டும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
* டொரண்டோவில் ஒரு தமிழ்ப் படம் 100 நாட்களாக ஓடியது என்றால் அது சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.
* இலங்கையில் 12 தியேட்டர்களில் சிவாஜி தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடியது.
* சிங்கப்பூரில் 2 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து சிவாஜி படம் ஓடியது.
* தமிழகத்தில் 90 தியேட்டர்களில் சிவாஜி 100 நாட்களை தொட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களிலும் புறநகர்களில் 13 தியேட்டர்களிலும் 100 நாட்களை தாண்டி ஓடியது.
* பெங்களூரில் சிவாஜி படம் 3 தியேட்டர்ளில் 100 நாள் ஓடியுள்ளது.

* மைசூரில் ஒரு தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடியது.

* மும்பையில் உள்ள அரோரா சினிமா ஹாலில் சிவாஜி நாளையுடன் 100 நாட்களை கடந்து ஓடியது.


சிவாஜியின் சாதனைகளில் இவை ஒரு சிலதான். இன்னும் நிறைய இருக்கிறது. பின்னர் நேரம் வரும்போது சிவாஜியின் ஒட்டு மொத்த சாதனைகளையும் தொகுத்துக் கொடுக்கிறேன்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!