அழகி, சண்டக்கோழி, இம்சை அரசன் 23ம் புலிகேசி ஆகிய படங்களில் படங்களில் நடித்து குடும்ப பெண்ணுக்கான முத்திரை பதித்த நடிகை மோனிகா. இவர் சிலந்தி படத்தில் கவர்ச்சி கணைகளை தொடுத்து தமிழ் ரசிகர்களை ஏக்க பெருமூச்சில் ஆழ்த்தியுள்ளார்.சிலந்தி படத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களால் கவர்ச்சியை சில காலம் மூட்டை கட்டி வைக்க முடிவு செய்துள்ளார் மோனிகா. இதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் முன்னா.
முன்னா-மோனிகா பங்கேற்ற முதலிரவுப் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு படமாக்கபட்டது. அப்போது கதாநாயகன் முன்னா, உணர்ச்சிவசப்பட்டு காட்சியை யதார்த்தமாகவே அமையும் வகையில் நடித்தாராம். இதனால் முன்னாவை கண்ட படி திட்டியுள்ளார் மோனிகா. இப்பிரச்சனைக்கு சிலந்தி இயக்குனர் ஆதி முற்று புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால் இந்த விஷயத்தை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்கிற நிலையில் இனியும் கவர்ச்சி வேண்டாம் என்கிற அதிரடி முடிவுக்கு வந்து விட்டார் மோனிகா. ஆனாலும் பல தயாரிப்பாளர்கள் சிலந்தி பட ஸ்டில்களை பார்த்துவிட்டு மோனிகா வீட்டு முன்பு காத்துக்கிடக்கின்றனர். ஹோம்லி கேரக்டர் இருந்தால் வீட்டுக்குள் வாருங்கள் என்று கதவடைப்பு நடித்தி வருகிறார்.
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!