CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-03

குருவி பட விமர்சனம்

நான் எழுதியுள்ள குருவி படத்தின் விமர்சனத்தை படிக்கும் முன், நீங்கள் விஜய் ரசிகராக மாற வேண்டும். ஏனென்றால் குருவி படம் விஜய் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

படம் துவங்கியதுமே காட்டப்படும் காட்சிகளைவிட விஜய் எண்ட்ரோ கொடுக்கும்போது தியேட்டரில் விசில் பறந்தது (தியேட்டரில் இருந்தவர்கள் எல்லோருமே விஜய் ரசிகர்கள்தான்.). கார் ரேஸில் பறந்து வருகிறார் விஜய். (கார் ரேஸ் நாயகன் அஜித்தை சீண்டுகிறார்களோ... என்று நினைக்கத் தோன்றுகிறது)

சரி... இனி படத்தின் எண்ட்ரோ காட்சிகளைப் பற்றி பார்ப்போம். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பாறை உடைக்கும் பகுதியில் ஆஷிசும், சுமனும் வைரத்தை தோண்டியெடுத்து மேல்நாட்டுக்கு கடத்துகிறார்கள். இந்த காட்சியை காட்டும்போதே இவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. சுமனும், ஆஷிசும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை மணிவண்ணன் தட்டிக்கேட்க, அவரை கொத்தடிமையாக்கி விடுகிறார்கள். அப்போது என் மகன் சிங்கம் மாதிரி வருவாண்டா என்று மணிவண்ணன் சவால் விடுகிறார். கடனால்தான் தந்தை ஓடிப்போனார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு குடும்பத்தை காக்கும் பொறுப்பு. தனது பொறுப்புணர்ந்து சிறிது நேரம் காட்சிகளை நகர்த்துகிறார் விஜய்.இந்த நிலையில் கடன்காரர்களால் விஜய்யின் வீடு ஏலத்துக்கு வருகிறது. வீடு ஏலம்போவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என நினைக்கும் விஜய், தனது தந்தைக்கு சுமன் தரவேண்டிய கடனை வசூலிப்பதற்காக மலேசியா செல்கிறார். கூடவே காமெடி என்ற பெயரில் கடிப்பதற்காகவே செல்கிறார் விவேக். போன இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை (வில்லன்கள் கேட்டவுடனேயே பணத்தை திருப்பி தந்து விட்டால் மீதி கதையை எப்படி நகர்த்துவது?). முகமூடி அணிந்து வைரத்தை கடத்துகிறார் விஜய்.

இதற்கிடையில் சிட்டுக்குருவிபோல மினுமினுக்கும் த்ரிஷாவுடன் காதல் மலர்கிறது. காதல் காட்சிகள் படத்தை நகர்த்த பெரிய அளவில் உதவவில்லை.வைரத்துடன் சென்னை திரும்புகிறார் விஜய். விஜய்யை தேடி த்ரிஷா, வைரத்தை தேடி சுமன் என்று எல்லோருமே சென்னையில் முகாமிட, அடுத்தடுத்து காட்சிகள் சென்னையில் நகர்கின்றன. சென்னையில் விஜய் குடும்பத்தாரிடம் இருந்து வைரத்தை பறிக்கும் சுமன், விஜய்யின் தந்தை கொத்தடிமையாக இருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு செல்கிறார். போகும்போது விஜய்யை சேற்றுக்குள் மூழ்கடித்து விட்டு போகிறார். ஆனால் விஜய் சாகவில்லை (ஹீரோ செத்துட்டா படத்தை நகர்த்த முடியாதே). சேற்றில் இருந்து எழுந்து வெகுண்டெழும் விஜய், தந்தையை மீட்டாரா? காதலியை கரம்பிடித்தாரா என்பதுதான் மீதி கதை.

படத்தில் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கின்றன. த்ரிஷாவின் கவர்ச்சி கண்ணுக்கு விருந்து.

மொத்தத்தில் குருவி - விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அ(திர)டி.



2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படத்தைப் பார்த்திட்டு தான் எழுதினீங்களா? விஜயை சேத்தில எல்லாம் மூழ்கடிக்கவில்லை. நிலத்தடி நீரோடு இணைந்த குட்டையில் தான் அழுத்தி விட்டுப் போவார்.

வால்பையன் said...

//சேற்றில் இருந்து எழுந்து வெகுண்டெழும் விஜய், தந்தையை மீட்டாரா? காதலியை கரம்பிடித்தாரா என்பதுதான் மீதி கதை.//

அப்படின்னா இதுக்கு முன்னாடி சொன்னது பெயர் கதையா!
நாலு இங்க்லிஷ் படம் பாக்குறது அதை காப்பி அடிக்கிறது இது தானே இவிங்க வேலை

வால்பையன்

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!