CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-16

சிலந்தி மோனிகாவின் சிறப்பு பேட்டி


நான் சினிமாவுக்கு புதிதல்ல என்று அவ்வப்போது கூறி வரும் நடிகை மோனிகா புதிதாக எடுத்துள்ள கவர்ச்சி பாலிசியால் கோடிக்கணக்கான ரசிகர்களின் பார்வையை தன் மீது பதிய வைத்துள்ளார்.

மோனிகாவின் பேட்டிக்கு முன் நிருபரின் டைரியில் இருந்து மோனிகா பற்றிய சிறு டேட்டா:-

நடிகை மோனிகாவின் சொந்த பெயரே மோனிகாதான். இவரது தாய்மொழி மலையாளம் என்கிறபோதிலும் பிறந்தது ஈரோட்டில். வளர்ந்தது சென்னையில். படித்ததும் சென்னையில்தான். இவரது தந்தை சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போதுதான் அவசர போலீஸ் 100 என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் மோனிகா, நீண்ட வருடங்களுக்கு பிறகு அழகி படத்தில் இளம் நாயகியாக அறிமுகமானார். பாவாடை, தாவணி அணிந்து ஹைகிளாஸ் கிராமத்து பெண் போல தோன்றிய மோனிகா, அழகி மோனிகா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.

பாவாடை, தாவணியில் வந்ததாலும், குழந்தை போன்ற முகவழகும் இருந்ததாலோ என்னவோ, மோனிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் மோனிகா அப்போது அளித்த பேட்டியொன்றில், கவர்ச்சியாக நடிப்பதிலெ‌ல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது, என்று கூறியிருந்தார். இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மோனிகா பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

திரைக்களத்தில் குதித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், தனது விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்தி, மேனி தெரிய நடிக்க ஒப்புக் கொண்டார் மோனி. அதன் பலன்தான் இம்சை அரசன் வாய்ப்பு.

அதன்பிறகு மாலைமுரசு பத்திரிகையில் சினிமா நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆதி, தான் ஒரு படம் எடுக்கவிருப்பதாகவும், அதில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் மோனிகாவிடம் ‌கேட்டுக் கொண்டார். இந்த படம் ஒரு திகிலான படம், கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்று ஆதி கூறியதால் நடிக்க ஒப்புக் கொண்ட மோனிகா, தாராளமய கொள்கைக்கும் உடன்பட்டார்.

சிலந்தி பட ஸ்டில்களை முதலில் பார்த்தபோது, அழகி மோனிகாவா இது? என்று கேட்கும் அளவுக்கு அரைகுறை ஆடையுடன் அலங்கோலமாக இருந்தார். இந்த அலங்கோலமே, சிலந்தியின் வெற்றிக்கு பெரிதும் உதவிருக்கிறது என்பது இப்போது படத்தை பார்த்த பின்னர் தெரிந்து கொண்‌டேன்.

இனி மோனிகாவின் சுவாரஸ்யமான பேட்டி:-

சிலந்தி படத்தில் இவ்வளவு கவர்ச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி?
சிலந்தி படத்தின் கதையை கேட்டதுமே மறுபேச்சே பேசாமல் ஒப்புக் கொண்‌‌டேன். கதைப்படி நானும், முன்னாவும் புதுமணத்தம்பதிகள். ஹனிமூன் போகும் இடத்தில்தான் பிரச்னை வருகிறது. ஹனிமூன் என்றால் கவர்ச்சி இருக்கத்தானே செய்யும். கதைக்கு தேவைப்பட்டதால் ஓ.கே. சொல்லிவிட்டேன்.

சிலந்தி படத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
அழகி படம் என்னை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இம்சை அரசன் படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. அந்த வரிசையில் சிலந்தி படம் எனக்கு வேறுபல படங்களுக்கு வாய்ப்பை தேடித் தந்துள்ளது.

இனி அடுத்தடுத்த படங்களிலும் இதேப்போல கவர்ச்சியாக நடிப்பீர்களா?
ஒரு படத்தில் கிளாமராக நடித்தால் எல்லா படங்களிலும் கிளாமராக நடிக்க வேண்டுமா என்ன? ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறேன். தேவையில்லாமல் கவர்ச்சியாக நடிக்க மாட்‌டேன்.

இப்போது எந்தெந்த படங்களில் நடித்து வருகிறீர்கள்?
ஏவி.எம்., தயாரிக்கும், அ.ஆ.இ.ஈ., படத்தில் நவ்தீப்புக்கு ஜோடியாக நடிக்கிறேன். சிங்கள பட வாய்ப்புகளும் வந்துள்ளன. கால்ஷீட் எப்படி கொடுப்பது என்று யோசித்து வருகிறேன். ஏராளமான தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கால்ஷீட் பிரச்னை வந்துவிடக்கூ‌டாது என்பதான் ஒவ்வொர படமாக ஒப்புக்கொண்டு வருகிறேன்.

சிலந்தி படம் பற்றி கிசுகிசுக்கள் பரவியது எப்படி?
சிலந்தி பட சூட்டிங் நடந்தபோது ஏராளமான கிசுகிசுக்கள் பரவின. ஆரம்பத்தில் கிசுகிசுக்களைப் பார்த்து பயந்தேன். இப்போது பழகி விட்டது. கிசுகிசுக்கள் வருவதன் மூலம் என் வளர்ச்சி தடைபடாது என்பதை புரிந்துள்ளதால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

(குறிப்பு : மோனிகாவின் பேட்டியை படிக்கும் வாசகர்கள் இதுகுறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்பது நிருபரின் அன்பு வேண்டுகோள். இதுபோல நடிகைகளின் பேட்டி இந்த வலைப்பூவில் இடம்பெற வேண்டுமா? என்பதையும் தெரிவியுங்கள். வாசகர்களே...!)

1 comments:

NELLAI said...

ஹாய்... பேட்டி நன்றாக இருக்கிறது. அதைவிட நிருபரின் டைரியில் இருந்து வரும் தகவல்கள் சினிமா ரசிகர்களுக்கு தேவையானவையாக இருக்கிறது. மற்ற நடிகர்கள், நடிகைகளின் டேட்டாக்களையும் நிருபரின் டைரியில் இருந்து கொடுத்தால் ரசிகர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். கீப் இட் அப் மிஸ்டர் நிருபர்ஜி.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!