2008-05-26
சிவாஜி ரஜினி கெட்டப்பில் விஷால்
மலைக்கோட்டை படத்துக்கு பிறகு நடிகர் விஷால் நடித்து வரும் படம் சத்யம். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகை நயன்தாரா. பில்லா படம் அளவுக்கு இல்லையென்றாலும் இந்த படத்திலும் நயனின் கவர்ச்சி ரசிகர்களை சூடேற்றும் என்பதில் ஐயமில்லை. படத்தில் விஷால் பொறுப்பான இளம் போலீஸ் அதிகாரியாகவும், நயன்தாரா நிருபராகவும் நடிக்கிறார்.
டைரக்டர் ராஜசேகர் படத்தை இயக்குகிறதர். படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் சென்னையில் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெறுவது போன்று காட்சியமைக்கப்படுகிறது. இந்த கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களுடன் மொட்டைத் தலையுடன் விஷால் மோதுவது போல் படமாக்கப்படவுள்ளது.
சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொட்டைத் தலையுடன் வந்து அசத்தியிருப்பார் .அதேபோலவே விஷாலுக்கும் கெட்டப் போட்டார்களாம். சிவாஜி அளவுக்கு சத்யமும் பேசப்படும் என்பது டைரக்டர் ராஜசேகரின் கூற்று.
சத்யம் குறித்து ராஜசேகரிடம் கேட்டபோது, சத்யம் படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராதான் வில்லன். தொடர் கொலைகள் செய்யும் உபேந்திராவை துரத்தி பிடிக்கிற அதிகாரிதான் விஷால். அடுத்தடுத்து பல திருப்பு முனைகளுடன் படம் பரபரப்பாக இருக்கும், என்றார்.
சத்யம் படம் தெலுங்கில் சல்யூட் என்ற பெயரில் ரீலிஸ் ஆகவிருக்கிறது என்பது கொசுறு தகவல்.
Labels:
vishal
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!