CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-22

பசுபதியுடன் ஜோடி சேருகிறார் சிம்ரன்


மதுரையில் தெருக்கூத்து நடத்தி வந்த பசுபதி, தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, வெயில் படம் மூலம் குணச்சி்த்திர நடிகராக தன்னை அடையாளம் காட்டி, வெடிகுண்டு முருகேசன் பட வாய்ப்பு மூலம் நாயகனாக முன்னேறியிருக்கிறார். இதற்கிடையில் காலமெல்லாம் சந்தோஷப்படும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குசேலன் படம். அதுவும் சூப்பர் ஸ்டாரின் நண்பர் கேரக்டர்.

இப்படி தனது நடிப்புத் திறனால் முன்னேற்றப்பாதையில் அடிமேல் அடியெடுத்து வைக்கும் பசுபதிக்கு மற்று‌மொரு வாய்ப்பு. இந்தியில் சக்கை போடு போட்‌ட படத்தின் தமிழ் ரீமேக் படத்தில்... அதுவும் சிம்ரனுக்கு ஜோடியாக...! என்ன பசுபதிக்கு சிம்ரன் ஜோடியா? என்று வாய் பிளக்காதீர்கள் ரசிகர்களே! (சிம்ரன், சூர்யாவுக்கு அம்மாவாகவே சம்மதித்து விட்டார் என்பது தனி கதை). இந்திப்படமான டாக்ஸி நம்பர் 9211 என்ற படத்தை இயக்குனர் லட்சுமிகாந்தன் தமிழில் ரீமேக் செய்கிறார். ஜி.வி. பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் பசுபதிதான் ஹீரோ. ஹீரோயின் வாய்ப்பு கேட்டு அலைந்து வரும் சிம்ரனுக்கு இப்படத்தில் ஹீரோயின் வாயப்பு கிடைத்துள்ளது. இவரைத் தவிர வேறொரு நாயகியும் படத்தில் இருக்கிறாராம்.

டாக்ஸி நம்பர் 9211 இந்தி படத்தில் ஜான் ஆபிரகாம், நானா படேகர், சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள் என்பது கொசுறு தகவல்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!