2008-05-11
குருவி படத்தின் அடுத்த சாதனை
இளையதளபதி விஜய், கனவுக்கன்னி த்ரிஷா, டைரக்டர் தரணி என்று கில்லி பட கூட்டணியில் உருவான படம் குருவி. இந்த படத்தை அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரித்தார். ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்களே வந்தன.
ஆனால் சத்தமில்லாமல் சிவாஜி படத்தின் சாதனையையே குருவி முறியடித்தது. சென்னை நகரில் ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு, சிவாஜி'யின் (25 காட்சிகள்) சாதனையை முறியடித்தது குருவி.
அதன் பின்னர் படம் வெளியான முதல் இரு தின வசூலிலும் குருவி சாதனை படைத்தது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் சென்னையில் ரூ.37 லட்சத்தை வசூல் செய்து பில்லாவை முந்தியது குருவி.
இந்த நிலையில் சென்னை பாக்ஸ் ஆபீசிலும் குருவிதான் ரெக்கை கட்டி பறக்கிறது. சென்ற வார இறுதியில் ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக பறக்கிறது குருவி. இரண்டாம் இடத்திலுள்ள ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் 18 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை ஈட்டியுள்ளது. தனுஷின் யாரடி நீ மோகினி ரூ.13 லட்சத்தை வசூலித்திருக்கிறது.
குருவியின் இந்த சாதனைகளால் தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர் தரப்பும் மகிழ்ச்சியில் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!