2008-05-13
என் பார்வையில் சிலந்தி : விமர்சனம்
ஐ.டி., கால்சென்டர் என தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கிறது. இங்கு வேலைபார்க்கும் பெரும்பாலானவர்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவிடுனது என்று தெரியாமல் குடித்து கும்மாளம் அடிப்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். இந்த வளர்ச்சியால் ஏற்படும் சிக்கல்களை அலசி ஆராயும் படம் என்றுதான் சிலந்தியை சொல்ல வேண்டும்.
புதிதாக திருமணம் செய்த முன்னாவும், மோனிகாவும் பாண்டிச்சேரிக்கு ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு நடக்கும் விபரீத சம்பவங்களையே திகிலாகவும், கிளுகிளுப்பாகவும் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ஆதி. இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்காக முதலில் இயக்குனர் ஆதியை பாராட்ட வேண்டும். பாண்டிச்சேரியில் ஆளில்லாத உல்லாச விடுதியில் தன்னை துரத்துவது போன உணரும் மோனிகா பீதியில் உறைந்து போகிறார். அடுத்தடுத்து நடக்கும் 3 தோழிகளின் கொலைகள் மோனிகாவை இன்னும் பயத்தில் உறைய வைக்கிறது. அந்த கொலைக்கு காரணம் என்ன என்பதை சஸ்பென்சாக வைத்து காய் நகர்த்தியிருக்கிறார்கள்.
படத்தின் ப்ளஸ் பாயிண்ட் மோனிகாதான் என்று பத்திரிகைகளும், டி.வி.க்களும் கண்டிப்பாக பாராட்டும். இதற்கு காரணம் மோனிகாவின் கொளுகொளு மேனியும், கிளுகிளு நடிப்பும்தான். அழகி படத்தில் பாவாடை, தாவணி அணிந்து அழகு பதுமையாக வந்த மோனிகாவா இது என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சி. நீச்சல் உடையில் மட்டுமல்ல, முதல் பாதியில் மோனிகா சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளிலுமே கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லை. பெரும்பாலான காட்சிகளில் அம்மணி ஜாக்கெட்டுடன்தான் திரையில் தோன்றுகிறார். கிளாமரில் சிக்ஸர் சிக்ஸராக அடித்து தாக்கியிருக்கிறார்.
புதுமுக ஹீரோ முன்னா புகுந்து விளையாடியிருக்கிறார். நடிப்பில் மட்டுமல்ல... மோனிகாவிடமும்தான்! முன்னாவைப் பற்றி எழுத வேறு எதுவும் இல்லை. எம்.கார்த்தியின் பின்னணி இசை பயமுறுத்துகிறது. சந்தன வேட்டைக்காரா பாட்டு மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பவுசியாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு ப்ளஸ். அவுதும் மோனிகாவுக்கு ஆங்கிள் வைத்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் சிலந்தி - வலையில் சிக்காத பூச்சி.
நிருபர் கமென்ட் : கொளுகொளு மேனியை காட்டும் மோனிகாவின் கவர்ச்சியும், நல்ல திரைக்கதையும் சிலந்தியின் ப்ளஸ்.
ஒரு கேள்வி : நல்ல படைப்பாக இருக்கிறதே... அப்புறம் ஏன் தேவையில்லாமல் முன்னாவைப் பற்றிய வதந்தியை அடிக்கடி பரப்பி வீட்டீர்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அப்ப கிளம்பிற வேண்டியதுதான்
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!