CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-14

மீண்டும் வருகிறார் மந்த்ரா


ப்ரியம் என்ற படத்தில் அருண்குமாருக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை மந்த்ரா பல முன்னணிகளுடன் ஜோடி சேர்ந்து ஓய்ந்த பின்னர் ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். மந்த்ராவின் பரந்து விரிந்த மனது இளைஞர்களை கவர்ந்து இழுத்தது.

அப்போதே குண்டு நடிகை என்று கூறப்பட்ட மந்த்ரா இப்போது இன்னும் அதிகமாகவே குண்டாகி விட்டார். திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகள் இல்லாததால் திரையுலகில் இருந்து விலகி இருந்த மந்த்ராவுக்கு தெலுங்கில் டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரையில் தனது கலைச்சேவையை தொடர்ந்து வரும் மந்த்ராவுக்கு தமிழ் வெள்ளித்திரையில் தலைகாட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

டைரக்டர் பாசில் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் கல்யாண சர்ச்சை நாயகன் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு அம்மாவாக நடிக்கத்தான் மந்த்ராவை கூப்பிட்டிருக்கிறார்கள். மந்த்ராவும் இந்த வாய்ப்புக்குத்தானே காத்திருந்தேன் என்பதுபோல யோசிக்காமல் ஓ.கே. சொல்லிவிட்டார்.

பரந்த மனதுக்கார மந்த்ரா மீண்டும் கலைச்சேவையாற்ற வருகிறார் என்ற செய்தியறிந்த பல இயக்குனர், தயாரிப்பு தரப்புகள் மந்த்ராவில் வாயில் கதவை தட்டத் துவங்கி விட்டார்கள்.... வாய்ப்பு கொடுப்பதற்காக...!

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!