CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-03

ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட ஜாக்கிசான் : புது தகவல்





தசாவதாரம் விழா பிரமாண்டமாக நடந்ததும், அவ்விழாவுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் மற்றும் இந்திய திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டதும் தெரிந்த விஷயம்தான். இந்த விழாவுக்கு வந்தபோது ஜாக்கிசான் இந்திய நடிகர்களிடம் பேச விரும்பவில்லை என்றும், இந்திய உணவுகளை தவிர்த்தார் என்றும் கூறப்பட்டது. தண்ணீர் கூட தான் கொண்டு வந்ததைத்தான் குடித்தார் என்று பத்திரிகைகள் எழுதி தள்ளின. இதனை சூட்டோடு சூடாக மறுத்தார் ஜாக்கிசான். அவரது அதிகாரப்பூர்வ இணைதளத்தில் மறுப்பு அறிக்கை வெளியிட்ட ஜாக்கிசான். தான் இந்திய நடிகர்கள் மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறேன் என்று கூறியது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் சென்னை வந்திருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க ஜாக்கிசான் விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை (தி நேம் இஸ் ரஜினிகாந்த்) எழுதிய பெண் டாக்டர் காயத்ரி, ஜாக்கிசானை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கியுள்ளார். அப்போதுதான் ஜாக்கிசான் தனது விருப்பத்தை தெரிவித்தாராம்.

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!