2008-05-16
ஜோதிகாவை தேடிய வி.ஐ.பி.க்கள்
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிகா மீண்டும் திரையில் தோன்றுகிறார் என்ற செய்தி கடந்த மாதம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட குறும்படத்தில்தான் ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகா தவிர, நடிகர்கள் விஜய், சூர்யா, மாதவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஹீரோவா? ஜீரோவா?என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா, மாதவன், சிவகுமார், படத்தை இயக்கிய ப்ரியா உள்ளிட்ட பல வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர். சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஜோ சில கால இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படத்தின் வெளியீட்டு விழா என்பதால், அனைவரும் ஜோதிகா வருவார் என்று எதிர்பார்த்தனர். பத்திரிகையாளர்களின் கேமரா கண்களும் ஜோவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தன. ஆனால் ஜோதிகா வரவில்லை.
இதனால் வி.ஐ.பி.க்கள் பலரும் சூர்யாவிடமும், சிவக்குமாரிடமும் ஜோ ஏன் வரவில்லை என்று கேட்டு துளைத்தெடுத்து விட்டனர். அவர்களும் ஜோ வராததற்கான காரணங்களை சொல்லி அனைவரையும் சமாளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!