CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-13

குசேலன் ரஜினியின் 20 கெட்டப் : எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்





சிவாஜி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் படம் குசேலன். மலையாளத்தில் கதபறயும்போள் என்ற பெயரில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த குசேலன். இந்த படம் தெலுங்கில் குசேலரு என்ற பெயரில் தயாராகி வருகிறது.



குசேலன் படத்தின் ரஜினிகாந்த், ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடிக்கிறார். அவரது கிராமத்து தோழர் வேடத்தில் நடிகர் பசுபதி நடிக்கிறார். பசுபதிக்கு இந்த படத்தின் பார்பர் கேரக்டர். அவருக்கு போட்டியாக சலூன் கடை வைத்து அல்லோலப்படும் கேரக்டரில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கிறார். பசுபதிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கிறார். நடிகை நயன்தாரா உள்ளிட்ட சில முன்னணி நடிகைகளும் படத்தில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க... குசேலன் படத்தில் ரஜினிகாந்த் 20 வேடம் போடுகிறார் என்ற தகவல்தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்காக உள்ளது. பாட்ஷா படத்தில் அழகு... நீ நடந்தால் நடையழகு... என்ற பாடலில் பஸ் கண்டக்டரில் துவங்கி ஐயர் டிராபிக் கான்ஸ்டபிள், தாதா என பட கெட்டப்களில் நடித்தார். இதேபோல குசேலனிலும் ஒரு பாடல் இருக்கிறதாம். இந்த ஒரே பாடலில் மட்டும் ரஜினிகாந்த் 20 விதமான கெட்டப்களில் தோன்றுகிறாராம்.



குசேலனில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளன. அதில் ஒரு பாடல் ரஜினியை புகழ்ந்து பாடப்படும் பாடல். இதில்தான் ரஜினி 20 அவதாரங்களை எடுக்கப்போகிறார். 16 வயதினிலே பட ரஜினியில் இருந்து, சிவாஜியில் ரஜினி வரை இதில் அடங்கும் என்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரஜினிகாந்தின் பருவ மாற்றங்களை சித்தரிக்கும் வகையில் இப்பாடல் அமையும் என்கிறது இன்னொரு தகவல்.படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் தங்கியிருந்து படத்தில் இடம்பெறவுள்ள 5 பாடல்களுக்கும் டியூன்களை போட்டு முடித்து விட்டார். இந்த பாடல்கள் மிக்சிங்கிற்காக விரைவில் லண்டன் செல்லவுள்ளது. பாடல் காட்சிகளுக்கு மட்டும் கோடி கோடியாக செலவிடப்பட்டு வருகிறது.

(அன்பு வாசகர்களே... நிருபர் வலைப்பூ குறித்தும்... சினிமா நிருபர் எழுதும் பதிவுகள் குறித்தும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குங்கள். உங்கள் கருத்துக்கள் நிருபர் வலைப்பூவின் வளர்ச்சிக்கு பயன்படும்)

0 comments:

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!