2008-05-27
குசேலன் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்....
சிவாஜியின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் குசேலன். இந்த படம் தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் குசேலடு என்ற பெயரிலும் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. நயன்தாராவுடன் டூயட் பாடலில் ஆடும் காட்சிக்காக கேரளா செல்லவிருக்கிறார் சூப்பர் ஸ்டார். பசுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் இன்னும் பாக்கியுள்ளதாம். இந்நிலையில் ஜூன் 20ம் தேதி குசேலன் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சென்னையிலும், ஐதராபாத்திலும் ஒரே நாளில் ஆடியோவை வெளியிட வேண்டும் என்பது ரஜினியின் ஆசையாம்.
அதே நேரத்தில் ரஜினியின் இன்னொரு ஆசையும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தீபாவளி தினத்தில் குசேலன் படத்தின் வெற்றிகரமான 100வது நாள் என்று மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18ம் தேதி குசேலனை திரையிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் டைரக்டர் பி.வாசு.
இதுபற்றி வாசுவிடம் கேட்டதற்கு, குசேலன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆடியோ ஏற்கனவே தயாராகி விட்டது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பாடல்களாக இருக்கும். ஆடியோ வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்பட்டும். படம் ரீலிஸ் தேதி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக ஜூலை மாதத்தில் ரீலிஸ் ஆகும், என்றார்.
Labels:
Kuselan,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தலைவர் படம் பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்.
பின்னூட்டத்துக்கு நன்றி கிரி அவர்களே...!
தாங்கள் தெரிவி்த்தபடி கமெண்ட்ஸ் செட்டிங்கில் மாற்றம் செய்திருக்கிறேன். இதுபோல எனது வலைப்பூவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!