CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-21

ஹனிமூனுக்கு இடம் தேர்ந்தெடுத்தார் நமீதா


இந்த தலைப்பை படித்ததும் நமீதாவுக்கு கல்யாணம் ஆகப்போகிறதோ? என்று நினைக்காதீர்கள். சமீபத்தில் பெருமாள் படத்தின் சூட்டிங்கிற்காக மொரீசியஸ் சென்று திரும்பியுள்ள நமீதாதான் இப்படியொரு செய்தியை தோழிகளிடம் பகிர்ந்து வருகிறார். இதுபற்றி கேள்விப்பட்ட நாம், நமீதாவை பார்க்க சென்றோம். வாங்கண்ணா... என்று மழலை குரலில் வரவழைத்த நமீதா, டீ ஆர் காபி என்றார். யுவர் சாய்ஸ் என்று சொல்லி 5 நீமிடம் ஆவதற்குள் காபி ரெடி.

மொரீசியஸ் அனுபவம் குறித்து நம்மிடம் நமீதா பகிர்ந்து கொண்ட விஷயங்கள் வருமாறு:-

சென்னையில் ரொம்ப வெயில் கொளுத்துது. ஆனால் மொரீசியசில் ரொம்ப ஜில்லுனு இருக்கிறது. ரொம்ப வித்தியாசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. மொரீசியஸ் கடற்கரையில் எப்ப பார்த்தாலும் காதல் ஜோடிகள் இருக்கிறார்கள் (நம்ம சென்னை கடற்கரையிலும் அக்கினி வெயிலை பொருட்படுத்தாமல் ஏராளமான காதல் ஜோடிகள் துப்பட்டாவுக்குள் மறைந்து இருக்கிறதை நீங்க பார்க்கலியாம்மா?),

இன்னொரு முக்கியமான விஷயம். நான் மொரீசியஸ் போனதுக்கு பிறகு நான்வெஜ்ஜிக்கு மாறிட்‌டேன். வெஜிடேரியனா இருந்த நான் அங்கு மீன் சாப்பிட்டேன். இனி மீன் மட்டும் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஒருநாள் கடலுக்குள் சென்று நீச்சல் அடித்‌தேன் என்று மொரீசியஸ் அனுபவத்தை அடுக்கிக் கொண்டே இருந்தபோது... ஒரு போன் அழைப்பு வந்தது. நாமும் விடைபெற்று திரும்பினோம்.

1 comments:

Anonymous said...

Sabash Namitha.. Vaalthukal

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!