CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-30

பழம்பெரும் நடிகை முத்துலட்சுமி உடல் தகனம்

தூத்துக்குடியை சேர்ந்தவர் டி.பி.முத்துலட்சுமி (வயது 77). 1948ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்த இவர் வீரபாண்டிய கட்டப்பொம்மன், அன்பே வா, நவராத்திரி, நாடோடி மன்னன் உள்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய முத்துலட்சுமி காலப்போக்கில் நகைச்சுவை நடிகையாக மாறினார். அந்தக்கால நகைச்சுவையில் தனக்கென தனி பாதை அமைத்து நடித்து பெயர்பெற்ற முத்துலட்சுமி, பழம்பெரும் நடிகர்களான எம்.ஆர்.ராதா, தங்கவேலு, டி.எஸ்.பாலையா உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருது, பரிசுகளை பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முத்துலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முத்துலட்சுமி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முத்துலட்சுமி தனது இயல்பான நகைச்சுவை நடிப்பால் ரசிக பெருமக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர், என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர், பழகுவதற்கு இனிமையானவர் என்று கூறியுள்ளார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

1 comments:

நானானி said...

பூரி என்றாலே நினைவுக்கு வரும்
பழம் பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமிக்கு என் அஞ்சலி.

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!