2008-05-25
பாண்டியில் கவர்ச்சி ஏன்? சினேகா பேட்டி
தனது கன்னக்குழியழகால் ரசிகர்களை கவர்ந்திழுத்த புன்னகை இளவரசி சினேகா, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்... பாடல் மூலம் பிரபலமானார். அவிழ்த்து போட்டு ஆடும் நடிகைகள் மத்தியில் இழுத்து போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் என்று சொல்லியதன் மூலம் பல பட வாய்ப்புகளை நழுவ விட்ட சினேகா, கவர்ச்சியால் கிடைக்கும் வாய்ப்பு தேவையே இல்லை, எனது நடிப்புக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்பேன், என்று வீராவேசமாக பேட்டியளித்தார்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... என்று சொல்வது போல சமீபத்தில் வெளியான பாண்டி படத்தில் சினேகா கவர்ச்சி தாண்டவமாடியிருக்கிறார். தொப்புள் தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டதன் மூலம் தமிழில் சினேகா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
இந்த கவர்ச்சி பற்றி சினேகா என்ன நினைக்கிறார்...? அவரிடமே கேட்டோம்.
புன்னகை சினேகா கவர்ச்சி சினேகா ஆனது ஏன்?
என்னை பொறுத்தவரை கிளாமர் நீண்ட நாட்களுக்கு நிற்காது, குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள் என்பது அசைக்க முடியாத கருத்தாகும். பாண்டி படத்தில் கவர்ச்சி தேவைப்பட்டது. அதனால் நடித்தேன்.
அடுத்தடுத்த படங்களில் இந்த கவர்ச்சி புயல் வீசுமா?
ஒரு படத்தில் கொஞ்சம்(?) கிளாமராக நடித்தேன் என்பதற்காக அடுத்து நடிக்கும் படங்களில் எல்லாம் கிளாமராக நடிக்க முடியுமா? படத்தின் கதையை பொறுத்துதான் எப்படி நடிப்பது என்று முடிவு செய்வேன். அதேநேரத்தில் நான் கிளாமராக நடிப்பதை விட குடும்ப பாங்கான ரோல்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். பிரிவோம் சந்திப்போம் படத்தின் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்திருந்தேன். எனது நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள்.
கிளாமர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உடல் இருக்கும் வரை மட்டுமே கிளாமருக்கு மதிப்பு இருக்கும். ஆனால் நடிப்புத் திறமை இருந்தால், இளமை போன பின்னரும் கூட வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்.
இவ்வாறு சினேகா கூறினார்.
Labels:
sneha
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
// படத்தின் கதையை பொறுத்துதான் எப்படி நடிப்பது என்று முடிவு செய்வேன்//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சினிமா நிருபர் நண்பரே இந்த word verification ஐ எடுத்திட்டீங்கன்னா கொஞ்சம் எளிதாக இருக்கும்.
//சினிமா நிருபர் நண்பரே இந்த word verification ஐ எடுத்திட்டீங்கன்னா கொஞ்சம் எளிதாக இருக்கும்.//
நண்பர் கிரி அவர்களே... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை. விரிவாக சொன்னால் உங்கள் அறிவுரை பரிசீலிக்கப்படும்.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!