CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-27

கிசுகிசுவும், தளபதி நடிகரின் பதிலும்


தமிழ் சினிமா செய்திகளுக்கான வலைதளம் ஒன்றில், கிசுகிசு பகுதியில் ஒரு முன்னணி நடிகரைப் பற்றிய கிசுகி இடம்பெற்றிருக்கிறது. அந்த கிசுகிசு வருமாறு:-

தளபதியின் சாலிகிராம வீடு வாஸ்துபடி தயாராகி வருகிறது. கடற்கரையோரம் தனியாக போனபின் அடிக்கடி பாட்டிலை ஓபன் செய்து ஏகாந்தத்துக்கு தாவி வருகிறாராம். கிராமத்து வீட்டுக்கு வந்தால் தட்டிக் கேட்க அம்மா, அப்பா உண்டு. தளபதியின் திருமதியின் ஐடியாவாம் இது.

இந்த கிசுகிசு குறித்து சம்பந்தப்பட்ட தளபதி நடிகரிடம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த தளபதி, என்னங்கண்ணா... இந்த மாதிரி என் நேமை டே‌மேஜ் பண்ற கிசுகிசுக்கெல்லாம் எப்டிங்கண்ணா பதில் சொல்றது. ஒரு நடிகர் வீடு மாறுறதைக்கூடவா இப்படி எழுதுவாங்க...! என்றார் வேதனையுடன்.

நாம் விசாரித்த ‌வரை... சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் இன்டீரியர் டெகரேஷன் வேலைகள் நடந்து வருவதால்தான் தளபதி கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள பங்களாவுக்கு குடியேறினாராம். இப்போது வீட்டு வேலைகள் முடிந்து விட்டதால் மீண்டும் சாலி கிராமத்துக்கு வந்து குடியேறவிருக்கிறார். சாலிகிராமம்தானே கோலிவுட்டின் வசந்த கிராமம்.

1 comments:

Anonymous said...

அடிச்சா குருவி குருவி குருவி... பிடிச்சி குருவி குருவி குருவி

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!