CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-05-22

கிரிக்கெட் வீரருடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகை


வதந்தி, கிசுகிசுவுக்கெல்லாம் பயந்தால் சினிமாவில் முன்னுக்கு வரவே முடியாது என்பார் சினிமா பித்தர். அந்த அளவுக்கு சினிமாவில் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் இந்த கிசுகிசு சக்கரத்தில் அதிகம் சிக்கிக் கொள்பவர்கள் நடிகைகள்தான். கிசுகிசுக்களால் கண்ணீர் விட்டு கதறிய நடிகைகளை பட்டியலிட்டால் சினேகா, சிம்ரன் என்று நீண்டு கொண்டே போகும். ஒருசில நடிகைகளை சுற்றி நிறைய கிசுகிசுக்களும், வதந்திகளும் வந்தபடியே இருக்கும். (இதெல்லாம் வளர்ச்சியின் அறிகுறி என்பதுதான் சினிமா லாஜிக்!)

அந்த வரிசையில் இப்போது சிக்கியிருப்பவர் நடிகை லட்சுமிராய். விளம்பர படங்களில் தலைகாட்டி சினிமா வாய்ப்புகளை குவித்து வரும் லட்சுமி ராய் தற்போது முத்திரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இன்னும் சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் நிறைய நடிகர்களுடன் இணைத்து கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் கிரிக்கெட் வீரர் தோணி.

நடிகை லட்சுமிராய் கிரிக்கெட் வீரர் தோணியுடன் ஒட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி லட்சுமிராயிடம் கேட்டால், வழக்கமாக நடிகைகள் சொல்வது போலவே, நான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, எனக்கு வேண்டாதவர்கள்... என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் யாரோ வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்கிறார் கூலாக...!

3 comments:

கிரி said...

எங்க தலைவி!!! மாளவிகா பத்தின எதாவது கிசு கிசு இருந்தா படிக்கலாம்னு பார்த்தா அவங்களும் டெலிவரிக்கு போய்ட்டாங்களாம்....அதனால குத்து ரம்யா பத்தின செய்தி இருந்தா சொல்லுங்க ... சும்மா கிண்டல் பண்ணினேன் ..கோப பட்டுடாதீங்க :-)

Samuthra Senthil said...

நண்பர் கிரி அவர்களுக்கு...

//எங்க தலைவி!!! மாளவிகா பத்தின எதாவது கிசு கிசு இருந்தா//

திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று ஒப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த மாளவிகா, பின்னர் கணவர் சம்மதத்துடன் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட வ்நதார். தற்போது அவர் சுந்தர் சி.யுடன் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார். குழந்தை வயிற்றில் இருந்தபோதிலும் உங்கள் தலைவி மாளவிகா போட்டுள்ள குத்தாட்டம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே கிலியை ஏற்படுத்தியதாம்.

//குத்து ரம்யா பத்தின செய்தி இருந்தா சொல்லுங்க//

குத்து ரம்யா இப்போது பெங்களூருவில் இருக்கிறார். ஒகேனக்கல் பிரச்னையில் கன்னட திரையுலகுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததும், தமிழ் சினிமாவை தாக்கி பேட்டியளித்ததும் அவருக்கு நிறைய பிரச்னைகளை கொடுத்துள்ளது. இதனால் தமிழ் பக்கம் கொஞ்ச நாள் (ஒகேனக்கல் பிரச்னையை மறக்குற வரைக்கும்) தலை காட்டாம இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்களாம். இதானால் தொங்கிப்போய் இருக்கிறது ரம்யாவின் முகம்!

(குறிப்பு : வாசகர்கள் நண்பர் கிரியைப் போல, தமிழ் சினிமா பற்றிய கேள்விகளை கேட்கலாம். அது கேள்வி& பதில் பகுதியாக வெளியிடப்படும்)

கிரி said...

//குழந்தை வயிற்றில் இருந்தபோதிலும் உங்கள் தலைவி மாளவிகா போட்டுள்ள குத்தாட்டம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே கிலியை ஏற்படுத்தியதாம்//

ஹா ஹா ஹா ஹா

//இதானால் தொங்கிப்போய் இருக்கிறது ரம்யாவின் முகம்!//

நீங்கள் தான் உண்மையான சினிமா நிருபர் :-))))

//குறிப்பு : வாசகர்கள் நண்பர் கிரியைப் போல, தமிழ் சினிமா பற்றிய கேள்விகளை கேட்கலாம். அது கேள்வி& பதில் பகுதியாக வெளியிடப்படும்)//

அய்யயோ இதை வேற சொல்லிட்டீங்களா? போச்சு இனி எத்தனை என்னை போட்டு தாக்க போறாங்களோ :-))))))

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!