2008-05-20
நமீதா பிரமாண்டம்... மெகா சைஸ் ஸ்டில்ஸ்
நடிகை நமீதா என்றாலே பிரமாண்டம்தான். அவரே பிரமாண்டம் படத்தில் நடித்தால்...! கேட்பதற்கே கிளுகிளுப்பாக இருக்கிறது அல்லவா? படத்தின் பெயர்தான் பிரமாண்டம். இந்த படத்தில் அந்த அளவு கவர்ச்சி இருக்காது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவியது. இதையடுத்து படத்தைப் பற்றிய விஷயங்களை திரட்ட ஆரம்பித்தேன். அப்பப்பா... கண்டிப்பாக நமீதாவின் பிரமாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்கின்றனர் பிரமாண்டம் பட குழுவினர். இதுபற்றி டைரக்டர் சாய்பிரகாஷ் கூறுகையில், அட என்ன சார்... நமீதா படம்னா ரசிகர்கள் எந்த எதிர்பார்ப்போட வர்றாங்களோ... அது கண்டிப்பா என் படத்தில் இருக்கும். படத்தோட ஸ்டில்ஸை பார்த்தீங்கன்னாலே தெரியும். பிரமாண்டம் என்ற பெயருக்கு பொருந்துற மாதிரி நமீதாவுக்கு நிறை நகைகளை போட்டு போட்டோ செஷன் நடத்திருக்கோம், என்றார்.
இந்த பிரமாண்டம் படம், கன்னடத்தில் நீலகண்டா என்ற பெயரில் வெளியாகி கன்னட ரசிகர்களை சூடேற்றிய படமாம். ஜி.ஏ. இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரவிச்சந்திரன், நமீதா, ஸ்ரீதேவிகா, சீதா, சுஜாதா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்துக்கு வசனம் எழுதியிருப்பவர் ஜே.பி.எம்.
Labels:
Actress Hot Gallery,
Namitha
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
tamizla aranmanai kili apidinu raajkiran movie vandade..the same movie is remaked in kannada which is again dubbed in tamil!!!!!!!!!!!!!!!!
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!