முத்தக்காட்சி இல்லாத தமிழ் சினிமாவா? என்று கேட்கும் அளவுக்கு ஆங்கிலப்படங்களுக்கு நிகராக முத்தக்காட்சிகளுடன் தான் இன்றைய தமிழ் சினிமாக்கள் இருக்கின்றன. அதிலும் புதுமுகங்கள் நடிக்கும் படங்கள் இருக்கிறதே... அப்பப்பா...! நாயகனும், நாயகியும் பின்னிப் பிணையும் காட்சிகள்கள்தான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கும். இது படத்தை பார்ப்பவர்களின் குறிப்பாக மாணவர்களின் மனதை ரொம்பவும் பாதிக்கும் என்று கருத்து தெரிவிக்கும் சென்சார்போர்டு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டு கம் என்று இருந்து விடும்.
ஆனால் ஒரு மாணவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை விளக்கும் வகையில் எடுக்கப்படும் ஒரு படத்தில் நாயகியின் உதட்டை நாயகன் கடித்து இழுப்பது போன்ற காட்சி இருந்தால்...? டைரக்டர் ஞானமொழி, மாணவன் நினைத்தால்.. என்ற பெயரில் புது படமொன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பவர் புதுமுக நடிகர் ரித்திக். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடித் ஆதிரா. இவர்தான் மலரினும் மெல்லிய என்ற படத்தில் வர்ஷினி என்ற பெயரில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நாயகனும், நாயகியும் நிலவே தங்க நிலவே என்று ஒருவரை ஒருவர் வர்ணித்து பாடும் பாடல் இடம்பெறுகிறது. இப்பாடல் காட்சியினிடையேதான் உதட்டுக்கடி முத்தக்காட்சியை படமாக்கியிருந்தார் டைரக்டர் ஞானமொழி. பாடல் காட்சியை பார்க்க விரும்பிய படத்தின் தயாரிப்பாளர் பி.கே.சந்திரனுக்கு போட்டு காட்டப்பட்டது. முத்தக்காட்சியை பார்த்து முகம் சுழித்த சந்திரன், அந்த காட்சியை நீக்குமாறு டைரக்டரிடம் கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து காட்சி நீக்கப்பட்டது.
மாணவன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்தை மையமாக கொண்டுள்ள படத்தில் இப்படி வல்கரான காட்சிகள் இருக்கக்கூடாது. இக்காட்சி இடம்பெற்றால் படத்துக்கு ஏ சர்டிபிகேட்தான் கிடைக்கும். தவறான மாணவர்கள் திருத்துவதற்கு இப்படம் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் சந்திரன்.
இதே படத்தில் இன்னொரு காதல் காட்சியில் முத்தக்காட்சி இடம்பெறுகிறது. ஆனால் அது ரொம்ப வல்கராக இருக்காது என்கிறார் டைரக்டர் ஞானமொழி.
(வாசகர்கள் கவனத்துக்கு : நிருபர் வலைப்பூவில் கேள்வி - பதில் பகுதியை வெளியிட உள்ளோம். வாசகர்கள் சினிமா தொடர்பான கேள்விகளை கேட்கலாம். கேள்விகளை இந்த செய்தியின் பின்னூட்டத்திலேயே கேட்கலாம்.)

3 comments:
விஜயகாந்த்தின் அடுத்த திரைப்படம் என்ன?
//Bangalore Jims said...
விஜயகாந்த்தின் அடுத்த திரைப்படம் என்ன?//
எங்கள் ஆசான்.
நமீதாவுக்கும், நயன்தாராவுக்கு சண்டையாமே..? உண்மையா நிருபர்?
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!