2008-05-19
கூச்சம் போய்விட்டது : த்ரிஷா பேட்டி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் த்ரிஷா தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான பீமா மற்றும் குருவி படங்களில் த்ரிஷாவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்ததாம். சக தோழிகளும், உறவினர்களும் த்ரிஷாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு கூச்ச சுபாவம். இப்போது கூச்சம் போய்விட்டதால் நடிப்பது எளிதாகி விட்டது என்று த்ரிஷா கூறுகிறார். த்ரிஷாவின் பேட்டி வருமாறு:&
தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்களே?
தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், என்னை வளர்த்த தமிழை என்னால் மறக்க முடியாது. அதனால் தமிழ் பட வாய்ப்புகளை மறுப்பதில்லை.
தற்போது தமிழில் எத்தனை படங்களில் நடித்து வருகிறீர்கள்?
டைரக்டர் விஷணுவர்தன் சார் இயக்கும் சர்வம், ராதாமோகன் சார் இயக்கும் அபியும் நானும், கவுதம்மேனன் சார் இயக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் கால்ஷீட் பிரச்னையா?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இடையில் சில காரணங்களால் படம் எடுப்பதில் தாமதமாகிவிட்டது. அவ்வளவுதான்.
தெலுங்கில் உங்களுக்கு வரவேற்பு அதிகமாமே?
தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்களும் எனது நடிப்பை ரசித்தார்கள். தெலுங்கில் பிரபாஷ§டன் நடித்த புஜ்ஜிகாடு படம் விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. அந்த படத்தில் எனக்கு தெலுங்கு பெண் கேரக்டர். இந்த படத்தின் மூலம் தெலுங்கில் எனது மார்க்கெட் மேலும் அதிகரிக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
தெலுங்கில் மார்க்கெட் அதிகரித்தால் தமிழை மறந்து விடுவீர்களா?
நான் முதலிலேயே சொல்லி விட்டேன். எத்தனை மொழிகளில் நடித்தாலும் தமிழை ஒருநாளும் மறக்க மாட்டேன்.
குருவி படம் சரியாக ஒடவில்லையே?
கில்லி படம் போல குருவியும் விறுவிறுப்பான படம்தான். இந்த படம் நல்ல வசூலை வாரி குவித்துள்ளது.
நடிப்பில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள்?
பொதுவாக நான் கூச்ச சுபாவம். ஆரம்பத்தில் டைரக்டர், அசிஸ்டெண்ட் டைரக்டர்களிடம் பேசவே கூச்சப்படுவேன். இப்போது கூச்சம் போய்விட்டது. சகஜமாக பேசிப் பழகுகிறேன். இதனால் நல்லபடியாக நடிக்க முடிகிறது.
உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்து பல மாதங்களாகி விட்டதே?
பத்திரிகைகாரர்களுக்கு என்னைப்பற்றி எழுதுவதே வேலையாகிவிட்டது. கிசுகிசுக்கள், வதந்திகளை நான் பொருட்படுத்துவதே இல்லை.
நடிகர் விஷாலுடன் நடிக்க மறுத்தீர்களாமே?
விஷால் திறமையான நடிகர். அவருடன் நடிப்பதற்கு நான் மறுக்கவில்லை. கால்ஷீட் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதால் முடிவை தெரிவிக்காமல் இருக்கிறேன்.
இவ்வாறு த்ரிஷா கூறினார்.
Labels:
trisha
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//பத்திரிகைகாரர்களுக்கு என்னைப்பற்றி எழுதுவதே வேலையாகிவிட்டது. கிசுகிசுக்கள், வதந்திகளை நான் பொருட்படுத்துவதே இல்லை.//
Athu... Ipdithan Irukkanum Nattula.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!