CINEMA NIRUBAR WELCOMES YOU

2008-08-07

பாவம்...! த்ரிஷா நிலைமை இப்படி ஆயிடுச்சே...!

Tamil Actress Trisha
தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள் நண்பர்களே..! நடிகை த்ரிஷாவைப் பார்த்து கோலிவுட்டில் பலரும் கேட்கும் பரிதாப கேள்விதான் இது.

இளைய தளபதி விஜய்யின் ஆஸ்தான ஹீரோயின் என்ற அந்தஸ்துடன் பந்தாவாக சுற்றி வந்த த்ரிஷாவை, ஒரே படத்தில் முந்திக் கொண்டு சென்றார் நயன்தாரா. இந்த மின்னல் வேக வளர்ச்சியின் காரணமாக த்ரிஷாவை விட நயன்தாராவுக்கு வாய்ப்புகளும் அதிகம் வருகின்றன. சம்பளவும் ஒன்றேகால் கோடியாகி விட்டது. நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க முடியாததால் மனமுடைந்து இருந்த த்ரிஷாவை அடுத்த சர்ச்சை வாட்டத் தொடங்கி விட்டது.

ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் ஜோடி சேரவிருப்பதுதான் அந்த பிரச்னை. ஆம்...! இந்தியில் வெளியான செம ஹிட் படமான ஜப் வீ மெட் என்ற படத்தை மோசர்பியர் நிறுவனம் தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யவிருக்கிறது. டைரக்டர் கரு.பழனியப்பன் இயக்கும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் அர்ஜூன்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் நடிகை த்ரிஷா. விஜய்யின் ஆஸ்தான நாயகி நான்தான் என்று சொல்லி வந்த த்ரிஷா இப்போது அர்ஜூடன் ஜோடி சேருகிறாரே என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

தெலுங்கில் எத்தனையோ ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன். அர்ஜூனுடன் ஜோடி சேருவதை ஏன் பெரிது படுத்துகிறார்கள் என்று வேதனைப்படுகிறார் த்ரிஷா. (ஆமா.. இது தப்பா என்ன?)

6 comments:

Samuthra Senthil said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்தா பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!

Anonymous said...

Entha Arjun. Action king Arjuna illa Allu Arjuna ?
Cleara sollungaba....

Anonymous said...

Entha Arjun. Action king Arjuna illa Allu Arjuna ?
Cleara sollungaba....

Yogi said...

சுப்ரமணியபுரம் பட இயக்குனர் சசிகுமாரின் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா நிருபரே? படத்தைப் பாராட்டி நாலு வார்த்தை எழுதிப் போடணும். அதுக்குத்தான் ...

Anonymous said...

இரண்டு முதியோர்கள் சேர்ந்து நடிப்பதில் என்ன தவறு!.திரிஷாவின் வருத்தத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்!.(கட்டிலை அல்ல! :))

Anonymous said...

ennachi.. aen site update pannalai

daily vanthu aematraththudan pogiren.. :(

Post a Comment

நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!

உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!