2008-08-05
எஸ்.ஜே.சூர்யா ரொம்ப நல்லவர் : புதுமுக நடிகை சர்ட்டிபிகேட்
நடிகர் எஸ்.ஜே.சூர்யா ரொம்ப நல்லவர் என்று புதுமுக நடிகை சர்ட்டிபிகேட் கொடுத்து அசத்தியுள்ளார்.
தமிழ்சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி, நாயகனாக அவதாரம் எடுத்து நடித்து வருகிறார். இவரது தனி பாணி இரட்டை அர்த்த வசனங்கள் இளம் ரசிகர்களை கவர்வதாக அமைந்ததால் அதே பாணியை தனது படங்களில் கடைபிடித்து வந்தார். தற்போது அவர் அந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காக நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பூஜை போட்டு நாயகி வேட்டை நடத்தியதாலேயே பல மாதங்கள் தாமதமாகத்தான் சூட்டிங்கை தொடங்க முடிந்தது. படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா என்பதால் பல நடிகைகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி கருத்து தெரிவித்த சூர்யா, நம்ம இமேஜ் அப்படி? என்று கூலாக சொன்னார். இதையடுத்து மும்பையில் இருந்து ஷாயாலி பகத் என்ற புதுமுகத்தை அழைத்து வந்தனர்.
நியூட்டனின் மூன்றாம் விதி படம் குறித்து ஷாயாலி பகத் கூறுகையில், இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்னோட அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் நடித்தது பெருமையான விஷயம். சூட்டிங்கின்போது எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் ஒரு இயக்குனர் என்பதால் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆரம்பத்தில் சூர்யா படமென்றதும் பலரும் பல மாதிரி சொன்னார்கள். எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே ஒரு மாதிரித்தான் இருக்கும். கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்துவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் பயந்தேன். ஆனால் அப்படி யாரும் என்னை வற்புறுத்தவில்லை. படத்தில் நான் டி.வி. தொகுப்பாளராக நடித்துள்ளேன். முக்கால்வாசி சூட்டிங் முடிந்து விட்டது, என்றார்.
Labels:
s j surya
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
//சூட்டிங்கின்போது எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் ஒரு இயக்குனர் என்பதால் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன//
ஹய்யோ!!! ஹய்யோ !!!
பாவம் !
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!