2008-08-05
சூட்டிங்கில் விபத்து : கவர்ச்சி நடிகை படுகாயம்
சினிமா சூட்டிங்கின்போது பைக்கில் இருந்து தவறி விழுந்து கவர்ச்சி நடிகை முமைத்கான் படுகாயமடைந்தார். இதனால் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.
டைரக்டர் தர்மலிங்கா இயக்கி வரும் படம் பிரம்மதேவா. ராயல் பென்டகன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் டாக்டர் ராம் நாயகனாக நடிக்கிறார். தேஜாஸ்ரீதான் கதாநாயகி. படத்தில் இடம்பெறும் குத்துப்பாட்டு ஒன்றின் சூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமேஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வருகிறது. இந்த பாட்டில் கவர்ச்சி நடிகை முமைத்கான் குத்தாட்டம் போடுகிறார். பாடலில் நடிகர் ராமை, முமைத்கான் பைக்கில் துரத்துவது போன்ற காட்சியும் உள்ளது. இதற்காக முமைத்கான் ஒரு பைக்கில் ராமை துரத்தி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் முமைத்கானின் வலதுகால், கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனடியாக படத்தின் நாயகனும், டாக்டருமான ராம், முமைத்கானுக்கு சிகிச்சை செய்தார். அவரது அறிவுரையின் பேரில் முமைத்கான் ஓய்வு எடுப்பதற்காக ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டார். சூட்டிங் ரத்தானது.
Labels:
mumaith khan
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த செய்தி குறித்த உங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே...!
ada paavame!
nallabadiyaa gunamadaindhu kalaisevai pannu thaayi! ;-)
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!