2008-08-01
ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினி பேசிய பேச்சு விவரம்
ஒகேனக்கல் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் கன்னடரான ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் காலையிலேயே உண்ணாவிரத மேடைக்கு வந்து அமர்ந்து அனைத்து தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார். இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சிலர், இனி கர்நாடகாவில் ரஜினி படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் குசேலன் படம் தயாரானது. குசேலனை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக அமைப்புகள் அறிவித்தன. ஆனார் அவர்களது எதிர்ப்பை மீறி கன்னட பிலிம்சேம்பர் குசேலனுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்குள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்ப சூழ்நிலை உருவானது. இந்நிலையில் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். ஒகேனக்கல் உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த் அப்படி என்னதான் பேசினார் என்பது பலருக்கும் கேள்வி எழலாம். இதோ ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசுவிருந்தினர் மாளிகை எதிரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த் பேசிய விவரங்கள்:
கர்நாடகாவில் வேதனையான விஷயம் நடந்துள்ளது. அங்கு தமிழர்கள் தாக்கப்படுவதை கடுமையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்துக்கு சொந்தமான ஒகேனக்கல்லுக்கு அவர்கள் எப்படி சொந்தம் கொண்டாடலாம்? இதற்காக அவர்களை உதைக்க வேண்டாமா? ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவர், அந்த மாநிலத்தில் பெரிய தலைவராக உள்ளவர், இப்பிரச்னையைத் தூண்டிவிட்டுள்ளார். வட்டாள் நாகராஜன் மாதிரியான சிறு அரசியல்வாதிகளை பற்றி பேச விரும்பவில்லை. கர்நாடக அரசியல்வாதிகளான தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா, கிருஷ்ணா ஆகியோர் தேர்தலுக்காக ஆட்டம் போட வேண்டாம்.
இவ்வாறுதான் ரஜினிகாந்த் பேசினார்.
இப்போது ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பகிரங்க மன்னிப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் கர்நாடக மண்ணில் பிறந்து வளர்ந்தவன். கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக இருந்து வேலை பார்த்த காலத்தை நான் இன்றும் மறக்கவில்லை. கன்னட மண்ணின் மீதும், மக்கள் மீதும் இன்று வரை மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். ஒகேனக்கல் போராட்டத்தின் போது, கர்நாடகாவில் பொது சொத்துக்களுக்கு சேதப்படுத் துபவர்கள், பொது அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தேனே தவிர, ஒட்டு மொத்தமாக கன்னடர்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை.
இதை எனது நண்பர்கள் வாட்டாள் நாகராஜ், நாராயணகவுடா உட்பட கன்னட அமைப்பினர் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒகேனக்கல் விவகாரம் இரண்டு மாநில அரசுகளுக்கு இடையில் உள்ள பிரச்னை. இதை கருவாக வைத்துக்கொண்டு கர்நாடகாவில் தமிழ் படங்களை திரையிட்ட தியேட்டர் மீது தாக்குதல் நடத்துவது, ஓசூரில் பஸ்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களைதான் நான் விமர்சனம் செய்து பேசினேன்.
கன்னடர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. மனித வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்று பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. இந்த விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன். மீண்டும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். இந்த விஷயத்தில் கன்னடர்களிடம் நான் பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இனிமேல் பேசும்போது, எச்சரிக்கையாக பேசுவேன். என் பேச்சால் கன்னடர்கள் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த வேண்டுக்கோளை ஏற்று நான் நடித்து வெளிவரும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Labels:
Kuselan,
rajinikanth
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
ரஜினி என்ன செய்வார் பாவம். எழுதிக்கொடுத்தால் தான் அவருக்கு வசனம் பேச வரும் போல. இல்லாவிட்டால் இப்படி உளறிக்கொட்டி கொண்டிருப்பார். பஞ்ச் டயலாக்கெல்லாம் படத்துக்கு தான் ஒத்து வரும்.
இனியாவது தமிழக மக்கள், ரஜினி ரசிகர்கள் திருந்துவார்களா பார்ப்போம். குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா அல்லது வரிந்துக்கட்டி கொண்டு குசேலன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதை நிறுத்துவார்களா என்று பார்ப்போம்.
இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தான் கேட்க தோன்றுது
Mr. PramKumar, we have to understand that every human being have his/her own duties, like that Mr. Rajini grown up in at KARNATAKA and he earned some money working as a conductor, again he moved to Tamilnadu to do his cine profession. In any circumstances he didn't ask Tamilians as well as his fans to make him or thought him as a GOD of Tamils... We only worshiping the so called KUTHADIS as our eligible leaders to replace Gandhi,Nehru,Rajaji, Patal, Etc. This era not start from Rajini its from our present CM, MGR,Jayalaitha......... and it continues to Vijayakanth. Can any these new leader prove their are CLEANLINESS in their personal life, definitely the answer is "NO". Because every these leaders are having an affair with some ladies or a men. Apart from all these fundamental laps, We are ready to accept them as our LEADERS, Really we have no right to ask questions.
Super Venkatesh
yes. I agree with Mr.Vengetesh.
Post a Comment
நிருபர் வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள், படங்கள் மற்றும் பக்க வடிவமைப்பு குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவியுங்கள் வாசக நண்பர்களே..!
உங்கள் கருத்துக்கள் எமது வளர்ச்சிக்கு உதவட்டுமே...!